பக்கம்:ஞான மாலை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஞான மாலை முடைய வாழ்வில் காம் பெறும் இன்ப துன்ப அடு: பவங்களைக் கெண்டு நெகிழ்வதும், உருகுவதும் ஆகிய காரியங்களைச் செய்யலாம். துன்பம் வந்தால் நம்முடைய அவலத்தை கினேந்து நெகிழ்ந்தும், இன் பம் வந்தால் இறைவன் கருணையை கினைந்து உருகி யும் பழக்கம் செய்து கொள்ளலாம். இதல்ை நாமும் பக்தர்கள் ஆகலாம். சாவியும் பெட்டியும் உருகுவதுதான் பக்திக்கு அடையாளம் என்று பார்த்தோம். அப்படி உருகுவதற்கு முன் நெகிழ வேண்டுமென்பதையும் பார்த்தோம், கெஞ்சக் கன கல் நெகிழ்ந்து உருகுவதுதான் கந்தர் அநு. பூதிப் பாடல்களின் பயனென்று அருணகிரியார் சொல்கிருர். நெகிழ்ந்து உருகுதல் பக்தர் ஆவதற்குத் தேவை என்பதை முன்பு பார்த்தோம். பக்தர் ஆளுல் அடுத்தபடி முத்தர் ஆகலாம். கந்தர் அநுபூதியைப் படித்தால் அல்லது பாராயணம் செய்தால் முத்தி நிலை உண்டாகும் என்று அருணகிரியார் சொல்ல வில்லை. நெஞ்சக் கன கல் நெகிழ்ந்து உருகும் என் கிருர். இதைவிடப் பெரிய பயன் முத்தி அல்லவா? அது கிடைக்கும் என்று சொல்லியிருக்கலாம்ே!” என்ற கேள்வி எழலாம். ஒரு பெரிய பெட்டி நிறையப் பணமும், பொன் னும், மணியும் ஒருவர் வைத்திருக்கிருர். அவற்றைத் தம் மகனுக்குக் கொடுக்கவேண்டுமென்று எண்ணு கிருர். அந்தப் பெட்டியைத் துக்கிக்கொண்டு வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/102&oldid=855697" இலிருந்து மீள்விக்கப்பட்டது