பக்கம்:ஞான மாலை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சொற் புனே மாலே 87 யும் கொடுத்து உயிர்க் கூட்டங்களைப் படைத்துக் காத்து அழிக்கின்ற ஆண்டவன் எல்லோருக்கும் அத்தகைய வசதிகளைச் செய்து தருகிருன். இது பொதுவான அருள். இதனுல் மனிதன் வாழ்ந்து இறந்து மீட்டும் பிறப்பு எடுத்து வாழ்கிருன். எல்லாமே ஆண்டவன் அருள் என்று எண்ணினுல் நெகிழ் வான். அருளும் அதல்ை வரும் இன்பமும் ஆயினும் இதற்கு மேலே, அவனுடைய திருவருளால் என்றைக்கும் பிறவாத இன்பத்தைப் பெறுவான். அதற்கு அவனுடைய சிறப்பான அருள் வேண்டும். பக்குவம் பெற்ற ஆன்மாக்களே இறைவன் தன்னுடைய திருவடியில் சேர்த்துக் கொள்வான். இந்தச் செயலே அதுக்கிரகம் என்று சொல்வார்கள். இறைவன் ஐந்து வகைத் தொழில் களே நடத்துகிருன்; அவை படைப்பு. காப்பு, அழிப்பு. மறைப்பு, அருளுதல் என்பவை. இந்த ஐந்தினும் முதல் நான்கும் எல்லா உயிர்களுக்கும் பொது வானவை. அநுக்கிரகம் பெறுவது பக்குவம் பெற்ற ஆன்மாக்களுக்கு மாத்திரமே உரியது. அதுவே அருளல் ஆகும். பக்குவம் பெற்ற ஆன்மாக்கள் இறைவனைத் தஞ் சம் என்று அடைவார்கள். பிரபஞ்சத்தை உண்மை யாகக் கண்டு, உடம்போடு வாழ்வதே பிறவிப் பயன் என்று எண்ணி, ஐந்து இந்திரியங்களுக்கும் சுகம் உண்டாகும்படி வாழ்நாளைப் போக்குகிறவர்கள் யாவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/105&oldid=855700" இலிருந்து மீள்விக்கப்பட்டது