பக்கம்:ஞான மாலை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சொற் புனே மாலே 89 அப்படி ஆவதற்குக் காரணம் முன்னமே இருந்த கருனே மிகுதியாக வேண்டும் என்பதே. இதனைக் கச் சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தில் சொல்கிருர். 'அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்ருய்ப் பிரமமாய் கின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகிக் கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே ஒரு திரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய." கூர்தல் என்பது உள்ளது சிறத்தல். முன்புள்ள திருவுருவங்களில் கருணை இருந்தது. அது இப் போது போதாது என்று ஆண்டவன் கருதினன், அதனைப் பின்பும் மிகுதி செய்யும்பொருட்டு ஐந்து முகங்களை ஆறுமுகங்கள் ஆக்கினன். பத்துக் கைகளைப் பன்னிரண்டு கைகளாக்கிஞன். காவேரி யிலிருந்து வயல்களுக்குச் செய்யப்படும் பாசனம் போதவில்லை என்ருல் ஐந்து அணைக்கு ஆறு அணை யாகக் கட்டி, பத்துக் கால்வாய்க்குப் பன்னிரண்டு கால்வாய்களாக வெட்டி அமைத்தால் பின்னும் மிகுதி யாகப் பாசனம் அமையும். அதுபோலத்தான் முருக னுடைய திரு அவதாரம். உயிர்கள் எல்லாம் உய்யும் பொருட்டுக் கருணை மிகுதியாகப் பில்கவேண்டு மென்று எடுத்துக்கொண்ட கோலம், ஆறுமுகம் என்னும்போது அருளின் மிகுதி கினைவுக்கு வரும். கருணைகூர் முகங்கள் அல்லவா? ஆகையால் இந்தப் பாட்டில், தஞ்சம் என்று அடைந்தால் அருள் செய் கின்றவன் முருகன் என்று சொல்ல வந்த அருணகிரி யார், அந்த அருளைப் பில்க விடுகின்ற உருவத்தில் ஆறுமுகம் உண்டு என்பதை நினைப்பூட்டுகிருர், ஆறுமுகங்கள் கொண்ட திரு அவதாரம் அருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/107&oldid=855702" இலிருந்து மீள்விக்கப்பட்டது