பக்கம்:ஞான மாலை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:92 ஞான மாலை மாலையாக இருக்கவேண்டும். சொல் என்பது எழுத் துக்களின் கூட்டம். வெறும் எழுத்துக்களின் கூட்டம் சொல் ஆகாது. பொருளோடு கூடிய எழுத் துக்களின் கூட்டங்தான் சொல்லாகும்.அந்தப்பொருள் சிறந்ததாக இருக்கவேண்டும். செம்மை என்ற சொல் லுக்கு நிறைவு, சிறப்பு, நேர்மை என்று பல பொருள் உண்டு. இந்த மாலையில் மிகச் சிறந்த பொருளை உடையனவும் எழுத்துக்கள் அமைந்தனவுமாகிய சொற்கள் கன்ருக அமைந்து இருக்கவேண்டும் என்பதையே, - செஞ்சொல் புனை மாலை என்பதல்ை குறிப்பித்தார். புனைதல் என்பதற்கு அலங்கரித்தல், அழகு செய் தல் என்று பொருள். அந்தச் சொல்லில் அலங்காரம் என்ற இலக்கணம் புலனுகிறது. மாலை யென்பது கட்டுவது. கட்டுவதை யாப்பு என்று சொல்வார்கள். செய்யுள் இலக்கணத்தை யாப்பிலக்கணம் என்று சொல்வது மரபு. எனவே மாலை என்பதனுல் யாப்பு இலக்கணம் அமைந்தது என்று கொள்ளலாம். இப்போது சொல் என்பதனுல் எழுத்தும் சொல்லும் வந்தன. செம்மையைச் சொன்னதனுல் பொருளின் சிறப்புத் தெரிந்தது. மாலை என்பதல்ை யாப்பைப் பற்றிய செய்தியும் அமைந்தது. புனைதலாகிய அலங் காரம் உண்டு என்பதையும் தெரிந்து கொண்டோம். அந்த வகையில், . . செஞ்சொல் புனை மாலை என்பதல்ை, எழுத்து,சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் உடைய, குறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/110&oldid=855706" இலிருந்து மீள்விக்கப்பட்டது