பக்கம்:ஞான மாலை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சொற் புனே மாலே 9? சக்தர்ப்பம் உண்டு. ஆதலால் அதை இங்கே விரிக்க விநாயகப் பெருமானுக்கு மற்றத் தெய்வங் களுக்கு இருப்பதுபோல நான்கு கைகள் இருப்ப தோடு முகத்தில் இருந்து தொங்கும் துதிக்கையும் ஒரு கையாகும். அதை, வக்ர துண்டம்’ என்று வட மொழியில் சொல்வார்கள். கோணலான மூக்கு” என்பது பொருள். தமிழிலும் சில சமயங்களில் மூக்கு என்று சொல்வார்கள். "நெடு மூக்கில் கரியுரித்தார்" என்பது தேவாரம். ஆனல் பெரும்பாலும் யானையின் முகத்தில் தொங்கும் உறுப்பைத் துதிக்கை, தும் பிக்கை என்று சொல்வதே வழக்கு. அது மூக்காக வும் பயன்படும்; கையாகவும் பயன்படும். பெரும்பா லும் கையாகவே பயன்படுவதால் துதிக்கை என்று சொல்லும் வழக்குத் தமிழில் ஏற்பட்டது. அந்தக் கையையும் சேர்த்தால் விநாயகப் பெருமானுக்கு ஐந்து கை இருப்பதைக் காணலாம். ஐந்து கரங்களை உடைய விநாயகப்பெருமானே வணங்குவோம் என்று அருணகிரியார் சொல்வதில் ஒரு நயம் இருக்கிறது. இங்கே விநாயகப்பெரு மானே வணங்குவது, முருகப்பெருமானப் பற்றிப் பாடு கின்ற பாமாலை நன்கு நிறைவேறவேண்டும் என்பதற். காகத்தான். அந்தப் பாமாலையில் ஐந்து இலக்கணங் களும் நிரம்பவேண்டும் என்று கருதினர். ஐந்து இலக் கணங்கள் அமைந்த இயல் சேர்ந்த தமிழ்ப் பாமா லையை ஐந்து கரங்களையுடைய விநாயகனே, நீ ஞ. 7 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/115&oldid=855711" இலிருந்து மீள்விக்கப்பட்டது