பக்கம்:ஞான மாலை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 105 பாடுகிற திருப்பணியையே எனது வேலையாகப் பணித்தருளவேண்டும்"என்பது இந்தப் பாட்டின்சுருக் கமான பொருள். இந்த அளவில் பாட்டின் பொருளைப் பார்த்தால் போதாது. திட்பமும், நுட்பமும் சேர்ந்த பாட்டாதலின் மெல்ல மெல்லப் பகுதி பகுதியாகப் பார்க்கவேண்டும். . சங்கிதிக் காட்சி இந்தப் பாட்டில்,முருகப்பெருமானப் பாடும் பணி தமக்கு அமைய வேண்டுமென்று. அருணகிரியார் சொல்லவில்லை. மயிலையும், வேலையும், கோழியை யும் பாடவேண்டும் என்று சொல்கிருர். முருகப் பெருமானின் திருக்கோயிலுக்குள் நுழையும்போது முன்னுல் இவற்றையெல்லாம் நாம் பார்க்கிருேம். முதலில் பலிபீடம் கண்ணில் படுகிறது. கம் உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்களே அந்தப் பலி பீடத்தில் பலியிட்டுவிட்டு வாகனத்தைப் பணி கிருேம். சிவபெருமானது திருக்கோயிலுக்குள் செல்லும்போது கந்தியெம் பெருமான வணங்கி இரண்டு கொம்புகளுக்கிடையே சிவபெருமானத் தரிசித்துப் பின்னே உள்ளே செல்லவேண்டும் என்பது முறை. . இப்படிப் பல வகையான அமைப்புகளை முன்னலே வைத்திருப்பானேன்? ஓர் உயர்ந்த அதி காரியைப் பார்க்க வேண்டுமானுல் அவர் வீட்டுக்குப் போகிருேம். அந்த வீட்டில் அவர் வாசலில் உட் கார்ந்திருக்கமாட்டார். காவலாளிகள் இருப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/123&oldid=855720" இலிருந்து மீள்விக்கப்பட்டது