பக்கம்:ஞான மாலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 என் கெழுதகை நண்பராகிய திரு அனந்தன் சுருக்கெழுத் தில் எடுத்துத் தட்டெழுத்தில் வடித்துத் தந்தார். அவர் தக்தவற்றைப் பார்த்துத் திருத்திப் புத்தக உருவத்தில் வெளியிட இறைவன் திருவருள் பாலித்தான். அந்த வெளி யீடுகள் மலர்ந்து வருகின்றன. அநுபூதிச் சொற்பொழிவு களேயும் அவரே சுருக்கெழுத்தில் எடுத்து உதவி புரிய முன் வந்தார்.இப்போது இந்த விளக்கவுரைகளேயும் புத்தக உருவில் வெளியிடும் முயற்சி தொடங்கி யிருக்கிறது. அநுபூதி விரிவுரையை முதல் முறையாக ஆற்றிவந்த போது உடனிருந்து கேட்டவரும், அல்லயன்ஸ் கம்பெனியை நிறுவியவருமாகிய அமரர் வி. குப்புசாமி ஐயரவர்கள், அப்போது அதுபூதிக்கு விரிவுரை எழுதித் தந்தால் புத்தகமாக வெளியிடலாமென்ற தம் விருப்பத் தைத் தெரிவித்தார்; பலகால் வற்புறுத்தினர். அதுபூதி விரிவுரை எழுதினுல் உங்களுக்கே கொடுக்கிறேன்’ என்று உறுதி மொழி புகன்றேன். அப்போது பெரிய புத்தகமாக ஒன்றை எழுதலாம் என்று கினே க்தேன். இப்போது முருகன் திருவருளால் சொற்பொழிவுகளே நாலுருவாகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆளுல் குப்புசாமி ஐயரவர்கள் முருகன் திருவடியை அடைந்து விட்டார். ஆயினும் நான் கொடுத்த உறுதிமொழியை மாற்றக்கூடாது என்று கருதி இவ்வெளியீடுகளை அல்லயன்ஸ் வெளியீடாகவே கொண்டுவர இசைந்தேன். நீ குப்புசாமி ஐயரவர்களுன்டய புதல்வர்கள் தம் தந்தையார் கினைவை எழுப்பும் இந்த அநுபூதி மாலையை நல்ல முறையில் வெளியிடுவதாக அன்புடன் ஏற்றுக் கொண்டார்கள். - என்பால் அளவற்ற அன்பும் இறைவனிடம் ஆழ்ந்த பக்தியும் சுருக்கெழுத்துக் கலையில் கவ்ல தேர்ச்சியும் உடைய நீ அனந்தன் என் சொற்பொழிவுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/14&oldid=855753" இலிருந்து மீள்விக்கப்பட்டது