பக்கம்:ஞான மாலை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 ஞான மாலே கொள்கிருர். இப்போது கந்தர் அநுபூதி மூலமாகச் செய்யப் புகுந்தது பாடும் பணி தான். இதன் வலிமையுறச் செய்யவேண்டும் என்ற ஆசையில்ை தோற்றுவாயிலேயே, பாடும் பணியே பணியா அருள்வாய் என்று சொல்கிருர். - - யார் யாருக்கு என்ன என்ன தகுதி இருக் கிறதோ அந்தத் தகுதிக்கு ஏற்றபடி பணிகள் உண்டு. ஆண்டவனுடைய கோயில் கும்பாபிஷேக கைங்கரி யத்தைச் செய்யப் புகுந்தால் அவரவர்கள் தங்கள் தங்கள் இயல்புக்கும் ஆற்றலுக்கும். ஏற்றபடி பணி புரிவார்கள். கல் வாங்கித் தருவாரும், வேலை செய் வாரும், பணமாகத் தருவாருமாகப் பல திருப்பணி களைச் செய்கின்ற மக்களை நாம் பார்க்கிருேம். மிகுந்த செல்வன் ஒருவன் இரண்டு கல் வாங்கித் தந்தால் அது போதாது. அவனிடத்தில் உள்ள செல்வத்துக்கு ஏற்றபடி கிறையப் பணம் வழங்க வேண்டும். காம் இறைவனுடைய திருப்பணியில் ஈடுபட்டால் அவன் கோயிலுக்குச் சென்று கும்பிட லாம்; கீழே விழுந்து வணங்கலாம்; பிறர் பாடிய பாடலப் பாடலாம். அருணகிரியார் அருட்பெருஞ் செல்வர்; செந்தமிழ்ச் செல்வர். அருள் உணர்ச்சி யில் தம் அநுபவத்தையும், செந்தமிழ்ப் புலமையில்ை வந்த பா வன்மையையும் ஒருமிக்க அமைத்துப் புதிய பாடல்களைப் பாடும் பணியைச் செய்ய ஆசைப்படு கிருர். - முருகப்பெருமான் அவருக்குத் திருப்புகழைப் பாடுவதற்குரிய ஆற்றலைக் கொடுத்தபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/140&oldid=855754" இலிருந்து மீள்விக்கப்பட்டது