பக்கம்:ஞான மாலை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ஞான மாலே செய்து உய்ந்தவர்கள். அத்வைதத்தை நிறுவிய சங்கரர் ஆண்டவனையும், அம்பிகையையும் வாயாரப் பாடியிருக்கிருர். அப்படியே இராமானுஜர் முதலிய சமயாசாரியர்களும் பாடும் பணியைப் புரிந்திருக் கிருர்கள். ஆசாரியர்களின் கூட்டத்தைச் சேர்ந்த வர் அருணகிரிநாதப் பெருமான். பலகாலம் எம் பெருமான் புகழைப் பாடிப் பாடிச் செம்மை படைத்த காக்கு அவருடைய காக்கு. முன்குலேயே பாட்டுப் பாடி இறைவனுடைய திருவருள் கைவரப் பெற்ற அருணகிரியார் இப்போது சிறந்த அநுபூதியைப்பெற்றுமீண்டும் பாடத்தொடங்கு கிருர். அநுபவம் பெறுவதற்குரிய கிலேயில் இருந்து பாடிய பாடல்கள் முதல் பாடல்கள். அநுபவம் பெற்ற பிறகு அந்த ஆனந்தாதிசய அநுபவத்தைப் பாடியவை கந்தர் அநுபூதிப் பாடல்கள். கயமுகாசுர சங்காரம் கோயில்களில் விநாயகப்பெருமான் பலவிடங் களில் எழுந்தருளி இருப்பர். வாசலில் இருப்பவருக் குத் துவார கணபதி என்று பெயர். உள்ளே போன லும் கணபதி இருப்பார். கந்தர் அநுபூதியாகிய சொற்கோயிலின் வாசலில் உள்ள காப்புப் பாட்டில் விநாயகரை வாழ்த்தி உருகிைேம். இப்போதும் அந்த விநாயகர் வருகிருர். எம்பெருமானைத் தரிசிக் கும்போது நம் கண்ணில் படுகிருர், இரண்டு பேரை யும் ஒருங்கே தரிசித்து அருணகிரியார், தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனியான சகோதரனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/142&oldid=855758" இலிருந்து மீள்விக்கப்பட்டது