பக்கம்:ஞான மாலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா ன що п %0 தமிழ் நாட்டுச் சமயங்கள் தமிழ் நாட்டில் பல காலமாக உள்ள சமயங்கள் வைணவமும், சைவமும். இந்த இரண்டும் இந்த மண் ணுேடு ஒட்டியவை. வேறு பல சமயங்கள் இந்த நாட்டுக்குவந்தாலும்இந்த இரண்டையும் மாற்ற முடிய வில்லை. தமிழ் காட்டுக்கு இவை ஒட்டிப் பழகிய சமயங் கள் என்ற செய்தியை இலக்கண நூல்களின்மூலமாக வும் தெரிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கணத்தில் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்திருக்கிருர்கள். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பவை அவை, மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், ஒன்றும் விளேயாமல் இருக்கிற இடம் பாலே என்றும், காடுகள் அடர்ந்த இடம் முல்லை என்றும், வயல் நிறைந்துள்ள இடம் மருதம் என்றும், கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் என்றும் வகுத் திருக்கிருர்கள். அந்த அந்த இடங்களுக்கு ஏற்ற இயல்புகளை எல்லாம் கண்டு வரையறுத்துச் சொல்லி யிருக்கிறர்கள். ஒவ்வொரு கிலத்திற்கும் ஒவ்வொரு தெய்வத்தை அமைத்திருக்கிருர்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/19&oldid=855777" இலிருந்து மீள்விக்கப்பட்டது