பக்கம்:ஞான மாலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலே 3 இந்த நாட்டு மண்ணுேடு ஒட்டிய தெய்வங்களே அவர் களும் மாற்றவில்லை. முருகனும் தமிழ்நாடும் சிவபெருமானுடைய மகனுகிய முருகப் பெரு மான் முன்னலே சொன்னபடி முதல் திணைக்குத் தெய்வம். முருகனைப் மற்றிய விரிவான செய்திகளும், வழிபாடுகளும் தமிழ் காட்டில் பரந்திருக்கின்றன. வடநாட்டில் அவனைப்பற்றிய செய்திகள் மிக அருமை யாகக் காணப்படுகின்றன. வடகாட்டில் உள்ளவர் கள் முருகனைக் கார்த்திக் என்று சொல்லி வழிபடு கிருர்கள். அவனைத் திருமணம் ஆகாத பிரம்மசாரி என்று கினைத்துப் பெண்கள் தரிசிப்பது இல்லை. ஆனல் தமிழ் காட்டிலோ இந்தப் பெருமானுடைய பெருமையை மிகவிரிவாகத் தெரிந்துகொண்டு பாடிப் போற்றி வழிபடுகிருர்கள், பலவிடங்களில் அவனு டைய திருக்கோயில்கள் விளங்குகின்றன. முருகனே கம்பி வாழ்ந்த பக்தர்கள் பலர். இன்றும் பலர் உண்டு. தமிழில் மிகப் பழங்காலம் தொட்டுப் புலவர்கள் அப் பெருமானைப் பாடியிருக்கிருர்கள். பரிபாடல் என்னும் சங்க நூலில் முருகப் பெருமானின் புகழ் மிக விரிவாகக் காணப்படுகிறது. திருமுருகாற்றுப்படை நக்கீரர் என்ற பெரும்புலவரால் இயற்றப்பட்டது. அந்த நூல் முழுவதும் முருகனுடைய பலவகைப் பெருமைகளைச்சொல்கிறது. வேறு சங்கநூல்களிலும் ஆங்காங்கே முருகனப் பற்றிய குறிப்புகள் புல கிடைக்கின்றன. அவனுடைய திருவுருவ வருணனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/21&oldid=855784" இலிருந்து மீள்விக்கப்பட்டது