பக்கம்:ஞான மாலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலை அருணகிரி நாதர் அருளியவை அருணகிரி நாத சுவாமிகளுடைய புகழை நான்கைந்து ஆண்டுகளாக காம் பார்த்து வந்திருக் கிருேம். கந்தர் அலங்காரத்தை முறையாகப் பார்ப்ப தன் வாயிலாக அவரது பெரும் கருணையையும், உள்ளத்தின் சிறப்பையும், அநுபூதிப் பெருமை யையும் ஓரளவு நம்மால் தெரிந்துகொள்ள முடிங் தது. அப் பெருமானுடைய உள்ளம் சிறந்து விரிந்த தாமரையைப் போன்றது. அந்த மலரின் நுண்மை யான மனத்தை, அநுபவ வாசனையைக் கந்தர் அலங்காரம் ஓரளவு நமக்குப் புலனுக்கியது. இப்போது அந்த அநுபவச் சிறப்பைக் கந்தர் அநுபூதி யின் வாயிலாகத் தெரிந்துகொள்வதற்கு முருகன் திருவருள் செய்திருக்கிருன். கந்தர் அலங்காரத் தைப் பார்த்த பிறகு அநுபூதியைப் பார்ப்பது {6){}, அலங்காரம் விரிவான பாடல்களே உடையது. அவை: கட்டளேக் கலித்துறை என்ற பாவினமாக அமைந்த பாடல்கள். கந்தர் அநுபூதி சற்றுச் சுருக்கமாக இருப்பது; கலிவிருத்தம் என்னும் பாவினத்தில் அமைந்தது. விரிந்த மலர் குவிந்து, பிறகு காயாகி, பின் கனியா கிச் சுவை கிரம்பி நிற்பதுபோல, அலங் காரம் சுருங்கி அநுபூதிக் கனியாக நமக்குக் கிடைத்திருக்கிறது. - திருப்புகழ் அருணகிரி நாதர் என்று சொன்னவுடனே கம் நினைவின்முன் வருகிறது. திருப்புகழ். திருப்புகழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/24&oldid=855790" இலிருந்து மீள்விக்கப்பட்டது