பக்கம்:ஞான மாலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 G5 Tai upräu யும் செப்பு என்று வைத்தாய் நீ என்று சொல்கிருர். :பதிருையிரம் பாடல்களைப் பாடியும் அவை சிறிய அளவாக இருந்தன என்று அருணகிரியார் சொல் கிருர், அவருடைய பேராசைதான் எவ்வளவு என்று முதலில் தோன்றும். ஆளுல் அவர் அவற்றைத்தாம் பாடினவையாக கினைத்தால்தானே பேராசை என்று சொல்லவேண்டும்? இறைவன் திருவருட் சக்தியே அவ்வாறு செய்தது என்பது அவரது கம்பிக்கை. இறைவனது திருவருட்சக்திக்குப்பதிருையிரம் பாட்டு என்பது மிகவும் சுருங்கிய அளவுதானே? அதனுல், "சிறிது அடியேனும் செப்பென வைத்து" என்று பாடினர். இந்தப்பாடல்களைப் புலவர்கள் மட்டும் பாராட்டியி ருந்தால் அருணகிரிநாதருக்கு மனநிறைவு உண்டாகி யிராது. சொல்லேயும் பொருளையும் கவிச்சுவையை யும் உணர்ந்து பாராட்டுபவர்கள் அவர்கள். இவற் றில் பக்தியும் அநுபவமும் கமழ்வதைப் பக்தர்களே உணரமுடியும். பக்தர்களாகிய புலவர்கள் கன்ருக உணரலாம். எல்லாவற்றையும் எல்லாரும் அறிந்து பாராட்ட முடியாது. அதற்கும் ஒரு தகுதி வேண்டும். திருப்புகழை பக்தர்கள் அற்புதம் என ஓதி'ஞர்கள். அதுகண்டு அருணகிரியார் மகிழ்வுற்ருர். 'சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழ்! என்று சொல்கிருர். தமிழில் வெண்பாவைப் பாட வேண்டுமானுலும் புலவர்கள் சற்றே யோசனை செய்வார்கள். - . - "எல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/32&oldid=855809" இலிருந்து மீள்விக்கப்பட்டது