பக்கம்:ஞான மாலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலே 29* பள்ளிக்கட்டத்திற்குப் போகிருன். ஒரு நாள் பலப்பம் வேண்டுமென்று தந்தையிடம் பணம் கேட்கிருன். மற்ருெரு நாள் புத்தகம் வேண்டுமென்று பணம் கேட்கிருன். பின்னும் ஒரு நாள் ரப்பர், பின்னும் ஒரு. நாள் சிலேட் என்று தினந்தோறும் நச்சரித்துக் கேட்டுக்கொண்டிருந்தால் தந்தைக்குக்கடிடக் கோபம் வரும். ஒரேயடியாக வாங்கிக்கொண்டு போவது தானே?” என்று கோபித்துக் கொள்வார். முருகன் அப்படியெல்லாம் கோபிப்பது இல்லை. எப்போது கேட்டாலும், எத்தனை முறை கேட்டாலும், வேண்டிய போதெல்லாம் கேட்டாலும் சிறிதும் வெறுப்பு அடையாமல் வேண்டியதை வேண்டியபோதெல்லாம் கொடுக்கும் வள்ளல் என்று அருணகிரியார் பாராட்டி யிருக்கிருர். அத்தகையவன் அவர் வேட்கையை நிறைவேற்ற மாட்டான? அருணகிரிநாதப் பெருமான் கேட்ட விண்ணப்பம் பலித்தது. ஐம்பத்தொரு பாடல் கள் அமைந்த ஞானமாலையைப் பாடவேண்டும் என்று ஆர்வத்தோடு கேட்ட அருணகிரிநாதருக்கு. அதற்குவேண்டிய ஆற்றலை அவன் அருளினன். அநுபவ கிலே நாவன்மையும், மன ஆற்றலும் மட்டும் இருக் தால் அநுபூதியைப் பாடமுடியாது. திருப்புகழைப்பாடு வதற்கு அந்த இரண்டும் இருந்தன. அதனுல் பாடி விட்டார். ஆனல் இந்த ஞானமாலையைப் பாடுவதற்கு, அவருடைய பக்குவ கிலே உயரவேண்டும். அநுபூதி பெற்ற பிறகே அநுபூதியைப் பாடவேண்டும். ஆகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/47&oldid=855842" இலிருந்து மீள்விக்கப்பட்டது