பக்கம்:ஞான மாலை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி கந்தர் அநுபூதியைப் பற்றிச் சில வரலாறுகள் வழங்குகின்றன. அருணகிரியார் கிளி உருவத்தில் இருந்து அநுபூதியைப் பாடினர் என்று சொல் வார்கள். அருணகிரியார் ஐம்பத்தொரு பாடல்களைப் பாடவேண்டுமென்று விரும்பினர். ஆண்டவன் அருள் பெற்று, அநுபூதியைப் பெற்று, அதன் பிறகு கந்தர் அநுபூதி என்ற இந்த அருமையான நூலைப் பாடினர். இரண்டு கிளிகள் சைவத்திற்கும், வைணவத்திற்கும் இரண்டு பேர் இறைவனுடைய புகழைக் கிளி உருவத்தில் இருந்து பாடியிருக்கிருர்கள். வைணவத்தில் பாடியவர் சுகப் பிரம்மம். அவர்பாடியது பாகவதம். சுகமுனிவர் உலக இயலைக் கடந்து நின்றவர். அவருடைய தூய இயல் பைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது. அம்முனிவர் பிறந்தஉடனேயேவெளியே புறப்பட்டுவிட்டாராம் அவ ரைப்பெற்றவராகிய வியாச பகவான், 'சுகா! சுகா!' என்று அவரை அழைத்துக்கொண்டு போரைாம்.அப் போது மரம்மட்டை எல்லாம். ஏன்? ஏன்?’ என்று கேட்டனவாம். வியாசர் தம் பிள்ளையைத் தேடிச் சென்று போகும்போது இடையிலே ஒரு குளத்தில் மகளிர் குளித்துக் கொண்டிருந்தனர். வியாசர் வருவ தைக் கண்டு தங்களுடைய ஆடையை அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/49&oldid=855846" இலிருந்து மீள்விக்கப்பட்டது