பக்கம்:ஞான மாலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை முருகனுடைய பெருமையைப் பாடிய கவிவாணர்கள் முற்காலத்திலும் பிற்காலத்திலும் பலர். திருமுருகாற்றுப் படையில் தொடங்கிய அவன் புகழ் வரவரப் பெருகி வளர்ந்து வருகிறது. முருகனைப் பாடியவர்களே இரண்டு வகையினராகப் பிரிக்கலாம்,தமிழ்ப்புலமை வாய்ந்தவர்கள்,முருகன்அருளேப் பெற்றவர்கள் என்று. தமிழ்ப் புலமையும் அருட் பெருக் கும் ஒருங்கே உடையவர்கள் சிலர். அவர்களுள் மிகச் சிறந் தவர் அருணகிரிநாதர். முருகனுடைய அருள நுபவத்திலே ஊறினவர் அப் பெருமான் என்பதை அவருடைய திருவாக் காகிய பாடல்கள் காட்டும். அதுபவ உறைப்பிலேதலைசிறந் தவர் அருணகிரிநாதர் என்பது மாத்திரம் அன்று. அளவின லும் அவர் பாடியவை மிகுதியாக உள்ளன. அவர் பாடி யவை (1) திருப்புகழ், (2) கந்தர் அலங்காரம், (3) கந்தர் அந்தாதி, (4) திருவகுப்பு. (5) மயில் விருத்தம், (6) வேல் விருத்தம், (7) சேவல் விருத்தம், (3) கந்தர் அநுபூதி என் பவை. இவற்றில் திருப்புகழ் வெள்ளம் போலப் பெருகி வந்தது, அருணகிரியார் வாக்கில், பதினருயிரம் திருப் புகழ்ச் சக்தப்பாக்களே அவர் பாடினர் என்று வேறு புலவ. கள் பாடியிருக்கிருர்கள். - o சந்தப் பாக்கள் பாடுவதில் அருணகிரி நாதருக்கு இகண அவரே என்று சொல்லவேண்டும். திருப்புகழ்ப் பாக்கள் தமிழ் நாட்டில் வரவரச் சிறப்பெய்தி வருகின்றன. அருணகிரியார் இயற்றிய நூல்கள் யாவுமே முருக பக்தியை உண்டாக்கும் திறம் வாய்ந்தவை. கந்தர் அநுபூதியைப் பலரும் பாராயண நூலாகக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/5&oldid=855848" இலிருந்து மீள்விக்கப்பட்டது