பக்கம்:ஞான மாலை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 35 துய்மைபெற்று முத்தி கிலத்தில் வசித்துக்கொண் டிருக்கும். அதற்கு முன்னுல் இருந்த கரணங்கள் மாறி வேறுவகையான கரணங்கள் அமையும். பசு கரணம் மாறிப் பதி கரணம் அமையும் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. அருணகிரிநாதப் பெருமான் பசு கர னைத்தோடு இருந்தபோது திருப்புகழ் முதலியவற் றைப் பாடினர். அக் கரணங்கள் பதிகரணமாக மாறி ஜீவன் முத்தி கிலே பெற்ற பிறகே கந்தர் அநுபூதி யைப் பாடினுர். சொன்னதைச் சொன்ன கிளி ஜீவன் முத்தகிலே பெற்றுப் பாடும்போது அருணகிரியார் பாடலே எம்பெருமானே அவர் வாயி லாகப் பாடினன். கிளி என்ற நினைவு வரும் போது தமிழிலுள்ள பழமொழி ஒன்றும் கினைவுக்கு வருகிறது. சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை' என்பது அது. முருகப்பெருமான் சொன்னதை அருணகிரியார் சொன்னர். இறைவன் மயமாக கின்ற கிலேயில் அவர் பாடின. அத்தனையும் முருகப்பெரு மான் பாடினவையாகவே கொள்ளவேண்டும். முரு கன் உள்ளிருந்து சொல்ல அதனைத் தம் வாயிஞலே அருணகிரியார் திருவாய் மலர்ந்தருளிஞர். இப்படிக் கொள்வது ஒரு மரபு. ஞானசம்பந்தப் பெருமான்ஞானம் பெற்றுப் பாடிய பாடல்கள் எல்லாம். இறைவன் உள்ளிருந்து சொன்னவையாகக்கொள்ள வேண்டும். திரு இலம்பையங்கோட்டூர்த் தேவாரத் தில் ஒவ்வொரு பாடலிலும், - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/53&oldid=855853" இலிருந்து மீள்விக்கப்பட்டது