பக்கம்:ஞான மாலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 39 லும் அதைப் புலப்படுத்துவதற்குரிய நெறியை உணர்ந்தவர்கள் சொல்லலாம். மக்கள் உய்யவேண்டுமென்று தாம் பெற்ற அநுபவத்தைச் சொல்கிறவர்கள் மிக அரியர். தாம் பெற்ற அநுபவத்தில் தம்மைக் கரைத்துக்கொண்டு அப்படியே இருந்துவிடுபவர்களே பெரும்பாலோர் அப்படி அல்லாமல் பலர் இந்த இன்பத்தை, மற்றவர் களும் அடையவேண்டுமென்று கருணையில்ை கினைக் கலாம். கினைப்பதோடு கின்ருல் பிறருக்குப் பயன் உண்டாகாது. கினைப்பதைச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் மிகச் சிலரே. சில பெரியவர்கள், 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று அரிய உபதேசங்களைச் சொல்லியிருக்கிருர்கள். அந்த அநுபவப் பாடல்களே எல்லாம் ஒருசேர வைத்துப் பார்த்தார் தாயுமானவர், யாரும் எட்டாத அளவில், அநுபவத்திற்கு மிகவும் அண்மையில் உள்ள கிலே வரைக்கும் அருணகிரியார் நம்மை அழைத்துச் செல் கிருர் என்ற உண்மையை அவர் உணர்ந்தார். ஒரு பெரிய அரண்மனை: அரண்மனையில் அரசன் தங்கும் இடம் நடுவில் இருக்கிறது. அரண் மனயில் வேலை செய்யும் சேவகன நாம் கண்டால் வாசல் வரைக்கும் அழைத்துச் செல்வான். அதற்கு அடுத்த கிலே வரைக்கும். அழைத்துச் செல் வார் உண்டு. இப்படியே மூன்ருவது நிலை, கான்கா வது கிலே, ஐந்தாவது கிலே என்று சற்றுத் துாரமாக அழைத்துச் செல்கிறவர்களும் இருப்பார்கள். ஆனல் அரசனுக்கு அருகில் அழைத்துச் சென்று விடுபவர் கள் மிகவும் சிலரே. மற்றவர்கள் பாடிய பாடல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/57&oldid=855861" இலிருந்து மீள்விக்கப்பட்டது