பக்கம்:ஞான மாலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஞான மாலே ரோடு ஒட்டிய அழுக்கை முதலில் நீக்கி, ஞானக் கனலிலே இட்டுச் சூடாக்கி, பேரருளாளர்களின் உப தேசமாகிய நவாசாரப் பொடியைத் தூவி ஆனந்த அநுபவத்தை கமக்குத் தருகிருன். "ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கி அநு பூதிஅடை வித்ததொரு பார்வைக்காரனும்' என்று அநுபூதியின் திறத்தை அருணகிரியார் திரு வகுப்பில் பாடுகிருர், . இந்த உடம்பில் இருக்கும்போதே இறைவ .ணுடைய அருள் அநுபவம் பெறுவது சாத்தியம் என்று பெருமக்கள் சொல்லியிருக்கிருர்கள். - 'உரையவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ உளபடியை உணருமவர் அநுபூதி யான துவும்' என்பது சீர்பாத வகுப்பு. இத்தகைய அநுபவத்தை மற்ற மக்களும் பெறவேண்டுமென்று அருணகிரியார் கந்தர் அநுபூதியைப் பாடினர். - கந்தர் அலங்காரத்திலும் தாம் பெற்ற அநுவபத் தைச் சில பாடல்களில் சொல்லியிருக்கிருர், ஆளுல் அநுபூதியில்நுட்பமாகவும் அழுத்தமாகவும் சொல்கிருர்: அநுபூதியின் அமைப்பு ஐம்பத்தொரு பாடல்கள் அடங்கிய கந்தர் அது பூதியைப் படித்தால் எல்லாமே அநுபூதியைச் சொல் கின்ற பாடல்களாக இரா. அதனைக் கண்டு, இது காறும் சொல்லிவந்தன எல்லாம் வெறும் புனேங் துரை என்று தோன்றும். அநுபவத்தை அப்படியே சொல்ல முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/64&oldid=855878" இலிருந்து மீள்விக்கப்பட்டது