பக்கம்:ஞான மாலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஞான மாலே பாடத் தொடங்குகிருர் ஆளுல் அவர் பெற்ற இன்பக் களிப்புப் பேசத் தொடங்குகிறது; அவரை கிலே கொள்ள விடுவது இல்லை. நம்மீது இரக்கம் சில பாடல்களில் தொனிக்கிறது. இறைவனுடைய அரு ளைப் பெற்ற வியப்புச் சில பாடல்களில் தொனிக் கிறது. இப்படி மாறி மாறி வருவதை அநுபூதிப் பாடல்களில் பார்க்கிருேம். - முருகப்பெருமானுடைய திருவருளால் தாம் பெற்ற அநுபவத்தை அருணகிரியார் கந்தர் அது பூதியாகப் பாடினர் என்று சொன்னேன். கந்தர் அநுபூதிப் பாடல்களில் எல்லாமே அநுபவத்தைச் சொல்வன என்று சொல்ல முடியாதென்றும், பல பாடல்கள் நாம் படுகின்ற அநுபவத்தை, அதாவது துன்பத்தைச் சொல்வனவாக இருக்கின்றன என்றும் சொன்னேன். பல இடங்களில் அருணகிரி யார், "நான் இன்ன துன்பத்தை அடைந்தேனே! இன்ன பாவத்தைச் செய்தேனே' என்று சொல்கிருர். 'வளைபட்ட கை மாதொடு மக்கள் எனும் தளை பட்டு அழியத் தகுமோ? தகுமோ?" "மட்டூர் குழல் மங்கையர் மையல்வலைப் பட்டு ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?" இந்த வகையான பாடல்களில் தாமே பல தீய செயல்களைச் செய்ததாகவும், ஆசைப்படுவதாகவும் சொல்கிருர். இவை யெல்லாம் அவருடைய அநுபவம் ஆகுமா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/66&oldid=855884" இலிருந்து மீள்விக்கப்பட்டது