பக்கம்:ஞான மாலை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஞான மாலே களே எண்ணி, அத்தனை செல்வம் நமக்கு இல்லையே என்று ஏங்குகிருன் படைப் பலம் உடையவனப் பார்த்தால் மற்ற அரசருக்குரிய படைகள் தனக்கு இல்லே என்று வருந்துகிருன். கல்வியில் சிறந்த ஒரு வரை அடைந்து கேட்டால் தம்முடைய கல்வி மிகச் சிறியது என்று வருந்துகிருர், இவ்வாறு அறிவு, ஆற்றல், செல்வம் முதலியவற் றைப் பெற்றவர்கள் தம்மையும் மிஞ்சியவர்களைக் கண்டு துன்புறுகிருர்கள். ஆதலால் வாழ்க்கை முழுவதுமே துன்பம் என்ற கினைப்புப் பலருக்கு ஏற் பட்டுவிடுகிறது. - 'பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்" என்பது மணிமேகலை. அ த ற்கு யார் யாரோ காரணம் என்று எண்ணிக் கோபம் அடைகிருேம். பொதுவாக நாம்துன்பம் அடைகிருேம் என்று நினைக்கி ருேமே யொழிய அதற்குக் காரணம் இந்தப் பிறவியே என்று கினைந்து வருந்துவது இல்லை. பிறவியினுல் துன்பம் உண்டாகிறது என்ற உணர்ச்சி அழுத்தமாக நெஞ்சில் பட்டால் நெஞ்சு கெகிழவேண்டும். "இத்தகைய துன்பப் பிறவியை காம் அடைந்து விட்டோமே! இதில் இருந்து மீள்வதற்கு வழி, என்ன?” என்று புலம்ப வேண்டும். - மரணத் துன்பம் - வாழ்நாள் முழுவதுமே இன்புற்றவன் ஒருவன் இருந்தாலும் அவனுக்குத் துன்பம் உண்டாகும் சமயம் உண்டு. உலகத்தில் பிறந்தவர்கள் எத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/94&oldid=855931" இலிருந்து மீள்விக்கப்பட்டது