இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிப்பெருங்கோ முடியரசன்
35
தட்டி எழுப்பினார்
தட்டி எழுப்ப வந்தார்- நம்மைத்
தட்டி எழுப்ப வந்தார் - ஐயா
-தட்டி
பட்டிகள் தொட்டிகள் பட்டண ஊர்களில்
-தட்டி
கொண்டித் தொழுவத்தில் கட்டிய மாடெனக்
குப்பையில் மேய்கிற கோழிக ளாமெனச்
சண்டை யிடும்மதச் சாத்திரக் குப்பையில்
-தட்டி
அண்டிப் பிழைத்தவர் ஆட்சி பிடித்தனர்
ஆட்சி புரிந்தவர் மாட்சி யிழந்தனர்
மண்டி யிடும்பல தொண்டு புரிந்தனர்
-தட்டி
18-6-1979