பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டாக்டர் முத்துலட்சுமியின்

உடனே அம்மையார் அந்த விவாதத்தின்போது குறுக் கிட்டு, அப்படியானால், அந்தப் பணிக்குத் தங்கள் மகனை அனுப்புவீர்களா?' என்று நெருப்பாகக் கொட்டி னார் வார்த்தைகளை. தாவலர் ஐயரி வாயடிங்கிம் E.onssorts

தமிழ் நாட்டு மருத்துவமனைகளில் ஆம்மையார் செயல்கள்ால் பல சீர்திருத்தங்கள் உருவாகின. அவற்றில் ஒன்று; பெண் மருத்துவர்கள் பெண் நோயாளிகளைப் வார்க்க, சிகிச்சை புரிய நியமிக்கப்பட்ட சீர்திருத்தமாகும்.

தமிழ்நாட்டு சுகாதார நிலையங்களில், பெண் உறுப் பினர்களை நியமிக்கப் பாடுபட்டார். அவரது நடவடிக்கை களால் பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

உயர்நிலைப்பள்ளிகளில் மருத்துவச் சோதனை முறை கணை, மாணவ, மாணவிகளுக்குச் செய்ய வேண்டும் என்ப தைச் செயல் முறைக்குக் கொண்டு வந்தது அம்மையாரே ஆவார்.

இவை அனைத்துக்கும் மேலாக, தனது ஜீவ நாடிக் கொள்கையான தேவதாசி அமைப்பு முறையை அடியோடு ஒழிக்கப்படுவதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் ஆருந்தொண்டே ஆகும் என்றால் மிகையல்ல!

தேவதாசி முறையை அம்மையா ஒழித்ததால், அந்த தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்களின் கதி என்ன? அவர்கள் எப்படி வாழ்க்கையை நடத்துவார்கள் என் கேள்வி எழுந்தது:

அதற்கும் டாக்டிர் முத்துலட்சுமி ஒரு திட்டிம் கொண்டு வந்தார். அதாவது இந்திய சேவ சமாஜத்தில் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். தேவதாசி" கள் என் பாருக்கு அந்த சமாஜம் மூலமாக நல்வாழ்வு கிடைக்க அவர் ஏற்பாடு செய்து தந்தார். -