பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வாழ்க்கை இடையருமல் நடக்கவேண்டிய வகையில் இயற்கையை இயக்கிவரும் ஒரு பெரிய சக்தியை நினைந்து உருகுவதற்கு இது காரணமாக உள்ளது." இவை போன்ற எத்தனையோ இடங்கள் உள்ளத்தைத் தொடுவனவாக உள்ளன. பல சொற்களுக்கும் சொற்ருெ டர்களுக்கும் இவர் காணும் விளக்கங்கள் எண்ணி எண்ணி நோக்கத்தக்கன. இந்த ஒரு நூல் பற்றியே எத் தனை நாட்கள் வேண்டுமாயினும் பேசலாம். ஆயினும் இந்த அளவோடு ஈண்டு அமைகின்றேன். அனைவரும் இந்த நூலை ஒருமுறையாவது ஊன்றிப் பயிலவேண்டும் என்பது என் வேண்டுகோள். (இந்நூல் இப்போது கிடைக் காவிடினும் விரைவில் அச்சிட்டு வெளிக்கொணர ஏற்பாடு கள் நடக்கின்றன என அறிகிறேன்.) இளங்கோவின் படைப்பு இனி, இவர் திறய்ைந்து தெளிந்த மற்ருெரு நூலாகிய சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒருசில காணலாம். அண்ணு மலைப் பல்கலைக் கழகத்தே மறைந்த சேதுப்பிள்ளை அவர் களால் அவர்தம் அன்னையார் சொர்ளும்பாள் நினைவாக அமைந்த சொற்பொழிவுகளே இளங்கோவடிகள் என்ற பெயரால் அ ைம ந் து ஸ் ள நூல். இதே சொர் ைம் பா ள் நி னை வு ச் .ெ சா ற் .ெ பா ழி வி னை ஆற்றுமாறு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் என்னை அழைத்தபோது அங்கே தமிழ்த்துறைத் தலைவராய்ப் பணி யாற்றிய அருமை நண்பர் டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் என்னைச் சாத்தனர் பற்றிப் பேசுமாறு சொன் ஞர்கள். 'டாக்டர் மு. வ. அவர்கள் இளங்கோவடிகளைப் பற்றிப் பேசிவிட்டார். எனவே இரட்டைக் காப்பியத்தின் மற்ருெரு கூருகிய மணிமேகலையைப்பற்றி நீங்கள்தான் பேசவேண்டும்' எனக் கூறியபோது உண்மையிலேயே இவர் அடியொற்றி வாழும் எனக்கு வியப்பாகவும் விருப் பாகவும் இருந்தது. அப்படியே சாத்தனர் பற்றிப் பேசி னேன். இது வன்றி இக்காப்பியத்துள் வரும் மாதவி ^.