பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 ரங்களின் தன்மைகளையும், நிகழ்ச்சிகளையும், ப, ற்றை யும் எவ்வெவ்வாறு அவர் நமக்கெல்லாம் அறிமுகம் செய்து வைக்கிருர் என்பதைப் பலவகையில் விளக்கு கிருர். சிலப்பதிகாரம் என்று இந்நூலுக்கு அமைந்த பெயர் பற்றி இவர் விளக்கும் திறன் எண்ணத்தக்கது. 'கண்ணகி காவியத் தலைவி. இளங்கோ தாம் இயற்றிய காவியத்திற்குக் கண்ணகி என்றே பெயர் வைத்திருக்கலாம். தண்டமிழ்ச் சாத்தனர் தம் காவி யத்திற்கு மணிமேகலை என்று பெயர் வைத்திருப்பது போல் இவரும் அமைத்திருக்கலாம். கலையுள்ளம் படைத்த இளங்கோ கண்ணகியின் காற்சிலம்பை நம் கண்முன் நிறுத்தும் வகையில் காவியத்திற்குச் சிலப்பதிகாரம் என்று பெயர் அமைத்துள்ளார்." "புகார் காண்டத்தில் சிலம்பு திருமண வீட்டில் சிறு அணிகலனுக உள்ளது. மதுரைக் காண்டத்தில் வீர நங்கையின் கையிலே விளங்கி அரசனுடைய அரண்மனைக்குச் செல்லுகிறது; வழக்கு ஆடுவதற்கு உரிய பொருளாக விளங்குகிறது. வஞ்சிக் காண்டத் தில் வழிபாட்டுக்கு உரிய பெருஞ்சிறப்போடு திகழ் கிறது’’ (பக். 57). எனக் கூறுகின்றர். எனவே, சிலப்பதிகாரம் என்ற பெய ரின் சிறப்பு நன்கு திறனறிந்து காட்டப்பெறுவதை உணர் கின்ருேம் நாம். பின்னர், நூலின் ஒவ்வொரு பகுதியிலும் அமைந்த ஒவ்வொரு நிகழ்ச்சியினையும் எடுத்து அதை இளங்கோவடிகள் விளக்கும் திறனையும் அவ்வாறு விளக்கவேண்டிய தேவையினையும் நன்கு எடுத்துக்காட்டு கிருர், மதுரையில் மாடலன் கண்டு கோவலன் பண்டைப் பெருமைகளையெல்லாம் கூறிய தன்மையினையும் அதனல் பயில்வார் பெறும் உளநெகிழ்வினையும் சுட்டி (பக். 68.69) கோவலன் உயர்ந்தவன்’ என்ற கொள்கையினை நிறுவப் பயன்படுத்துகிருர், 7