பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 என்று தம் ஆய்வினை அறுதியிடுகிருர். இந்த அடிப்படை யிலேதான் இவர்தம் நூல்கள் பலவும் சிறப்பாக "மண் குடிசை'யும் அமைந்திருப்பதைப் பயில்வோர் உணர்வர். இளங்கோவடிகள் காட்டிய நெறியிலே நின்றுதான் சிலம்யில் வரும் முக்கிய பாத்திரங்களாகிய கண்ணகி, மாதவி என்ற இருவரையும் பற்றித் தனித்தனித் திறய்ைவு நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் இருவர்தம் வாழ்க்கைப் போக்கு-தடைப்பட்ட வாழ்க்கை நிகழ்ச்சிகள்-இயற்கைச் துழல்-சமுதாயநெறி இவை பற்றியெல்லாம் இளங்கோ வடிகள் வழிநின்று ஆய்ந்து அவர்தம் குற்றமற்ற தன்மை யினையும் அப்பாத்திரங்களின் உள்ள உணர்ச்சிகளையும் அவ்வுணர்ச்சிகள் வழியே தோன்றிய நிகழ்ச்சிகளையும் நன்கு விளக்கிக் காட்டியுள்ளார். அவை இரண்டும் பயில் வார் உள்ளத்தைவிட்டு என்றும் நீங்காத சொல்லோவியங் களாம். குறுந்தொகையும் நெடுந்தொகையும் இனி, மு.வ. அவர்கள் தனித்தனியாக இரண்டு பாடல் க%ள எடுத்துக் கொண்டு திறய்ைந்த வகையினைக் காண்போம். ஒன்று, 'கொங்குதேர் வாழ்க்கை என்ற குறுந் தொகையின் இரண்டாவது பாட்டு; மற்றென்று, 'அளிநிலை பொருஅது எனத் தொடங்கும் நெடுந்தொகையின் ஐந்தாவது பாட்டு. முதல் பாட்டு கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா (1949)வின் தலைமைச் சொற்பொழிவு. மற்றது, சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் பச்சையப்பன் கல்லூரியில் (1944) ஆற்றிய மூன்று மணி நேரச் சொற்பொழிவு. இந்த இரண்டிலும் மு. வ. அவர்கள் திறய்ைவுத் திறன் முழுவதையும் பெய்து, இந்தப் பாடல் க%ளப் பயில்வோர் உள்ளத்தில் என்றும் பதியவைக் கின்ருர், முன்னதாகிய குறுந்தொகைப் பாடலை இங்கே காண்போம். இப்பாடல் சங்க இலக்கியக் குறுந்தொகைப் பாட லாக அமைவதோடு திருவிளையாடற் புராணத் தொடர்