பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 இவர் தெளிவுபடக் காட்டிக் கொண்டே செல்கின்ருர். இவர் இப்பாட்டினை விளக்க வேறு எத்தனையோ சங்கப் பாடல்களைத் தமக்குத் துணை யாக அழைத்துக்கொள்ளு கிருர். இவரே, "ஒரு பாட்டைக் கற்பவர்க்கு ஏதேனும் ஐயம் எழுந்தால் மற்றப் பாட்டுக்கள் கருத்துக்கள் முன் வந்து துணை செய்யும்; ஐயம் போக்கும்; உண்மை உணர்த்தும்.' (ப. 34) என்கின் ருர். அடுத்து வருகின்ற இலக்கியமும் வாழ்க்கையும், என்ற தலைப்பு இவர் தொடர்ந்து காட்ட இருக்கும் இப் பாட்டின் புதுப் பொருளுக்குத் தோற்றுவாயாக-வழி காட்டியாக அமைகின்றது. இப்பகுதியில் உண்மையில் வாழ்க்கை நெறியில் அன்றும் இன்றும் மக்கள் காண்பன, துய்ப்பன, உணர்வன இவை பற்றியெல்லாம் விளக்கம் தருவதோடு அவ்வவற்றிற்கேற்ற சங்கப் பாடல்களையும் துணைகொண்டு காட்டுகின் ருர். 'அறிவும் உணர்வும் ஆகிய இரண்டும் வேண்டும் என்று தாமே தெளிந்து, ஒருபுறம் உலக வாழ்க்கை அறிவை வளர்க்க, மற்றெரு புறம் காதல் வாழ்க்கை உணர்வைப் பண்படுத்த வாழவேண்டும். அவ்வாறு அமைந்து திருந்தியநல் வாழ்க்கையின் அனுபவத்தால் உயர்ந்த பாட்டு உணரப்படுவது எளிதாகும்" (ப.108) என்று இப்பகுதியை முடிக்கும்போது தாம், இவ்வறிவா லும் உணர்வாலும் இப்பாட்டின் பொருளைக் கண்டு துய்க்க முடிந்தது எனச் சுட்டிய பிறகு புது விளக்கத்துள் இவர் புகுகின்றர். புதுப்பொருள் காணும்போது தொடர் தொடராகப் பகுத்து ஒவ்வொன்றன் இன்றியமையாச் சிறப்பையும்,