பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இவர் முன்னுரைகளில் சில அடிகளை இங்கே காணின் சாலும் என எண்ணுகிறேன். 'மற்றச் சிறுவர்கள் மணல் வீடு கட்டும்போதும், நடைவண்டி ஒட்டும்போதும், வளர்ந்தவர்கள் அந்த விளையாட்டுக்களைப் பார்க்கின்றனர்; வேடிக்கையாகப் பார்த்து மகிழ்கின்றனர். உள்ளம் பண்பட்ட சான்றேர் கள், அந்தச் சிறுவர்களின் மணல் வீட்டையோ நடை வண்டியையோ வெறுப்பதே இல்லை; தம்மை மறந்து கண்டுகளிக்கும் நெஞ்சம் பெற்று மகிழ்கின்றனர். இளைஞர்களின் ஒழுக்கநெறி பிறழாத காதல் வாழ்வை யும் சான்ருேர்கள் அவ்வாறே நோக்குகின்றனர். கற் பனை வளம்பெற்ற சான்றேர்கள் அவ்வாழ்வைப் பாட்டாக வடித்துப் பிறரும் நோக்கி மகிழுமாறு தரு கின்றனர். அவ்வாறு சங்ககாலத்துத் தமிழ்ச் சான்ருே ரால் தந்தருளப் பெற்ற பாட்டுக்களில் சிலவற்றின் விளக்கங்கள் இந்நூலில் உள்ளன.” என்று நடைவண்டிக்கு முன்னுரை தந்து நூலை நம் முன் வைக்கின்றர். இவ்வாறே மணல்வீடு என்று மற்ருெரு நூலும் உண்டு. நல்ல தலைப்புக்களிலே இவருக்கே இயல் பாயமைந்த எளிய நடையிலே சாதாரணக் கல்வி கற்ருேரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உயர்ந்த சங்கப் பாடல்களில் உள்ள விழுமிய கருத்துக்களையும் அவை வாழ்வொடு பொருந்திய வகைகளையும் நன்கு விளக்குகிருர். "இலக்கிய உலகத்தில் சான்றேர் பலர்உள்ளனர். அவர்தம் தொடர்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. பழந்தமிழ் இலக்கியத்தில் அச்சான்றேர் உணர்வெல் லாம் தெளிவாகக் காண்கிருேம். அவர்தம் உணர்வே தமிழன்னையின் நெஞ்சம். அவ்வுணர்வின் பெற்றி ஒருவாறு சுருங்கிய அளவில் எடுத்துரைப்பதே இந் நூலின் நோக்கமாகும்"