பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 விருந்து, நெடுந்தொகைச் செல்வம், நற்றிணைச் செல்வம், குறுந்தொகைச் செல்வம் என்பனவாகும். இந்த நூல்கள் அனைத்தும் அவ்வத் தொகைகளின் பாடல்களை விளக்கும் தன்மையினைப் பயின்றேர் அறிவர். நான் அவற்றுளெல் லாம் புகாது, அவர் முன்னுரையில் சுட்டிய இரண்டொரு கருத்துக்களை மட்டும் உங்கள் முன் வைத்து விடைபெறு கின்றேன். நெடுந்தொகை விருந்தின் முன்னுரையில் இத்தகைய நூல்கள் எழுதவேண்டி நேர்ந்த காரணத்தை இவர் விளக்குகிருர், 'சங்க இலக்கியம் என்ருல் என்ன என்று அறி யாதவரும், அத்தொடரைக் கேட்டறியாதவரும் பலர். இந்த நிலை தமிழகத்தில் இனியும் நீடித்தால் நன்நன்று. சங்க இலக்கியம் என்ருல், எமது எமது என்று பெரு மிதத்துடன் எண்ணும் நெஞ்சமும் கூறும் நாவும் இனி மிகுதல் வேண்டும். 'இவ்வாறு மக்களில் பெரும்பாலோர் தம் முன் னேரின் இலக்கியச் செல்வத்தைப் போற்றும் நிலை வேண்டுமானல், பழைய இலக்கிய நூல்களை எளிய முறையில்-ஆயினும் அடிப்படையான உண்மை திரியா வகையில்-வெவ்வேறு வடிவில் தருதல் வேண்டும். சிறிது கற்ருேரும் தாமே படித்துணருமாறு எளிதில் பொருள் விளங்க வேண்டுமானல், அரிய பழஞ் சொற்களையும் தொடர்களையும் புதிய எளிய சொற்களாலும் தொடர்களாலும் விளக்குதல் வேண் டும். இந்த நோக்கம் கொண்டே, இந்தச் சிறு நூலில் இச்செறிப்பு, வரைவு கடாதல் முதலான பல தொடர் கள் இல்லாமல், இக்காலத்தில் பயின்று வழங்கும் சொற்களையும் தொடர்களையுமே கூடியவரையில் பயன்படுத்த நேர்ந்தது. அதேைலயே சந்திகளைப் பிரித்தலில் ஒரளவு மரபு கடந்து செல்லவும் நேர்ந்தது.