பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 முதல்முதல் வரதராசனர் பேச்சை யான் வெட்டு வாணத்தில் கேட்டேன். அப் பேச்சு அவர் முக அமைப்பைப் பற்றி யான் கொண்ட முடிவை உறுதிப் படுத்தியது. அவரது எழுத்தும் பேச்சைப் போலவே இருத்தல் கண்டேன். வரதராஜனரின் பேச்சிலும் எழுத்திலும் பர்னட்ஷா வின் கருத்து ஆங்காங்கே பொதுளும். அவர் பர்னட்ஷா நூல்களைப் படித்து ஒரு 'தமிழ் பர்னட்ஷா ஆனர் என்று கூறுதல் மிகையாகாது. பர்னட்ஷா வைப் பார்க்கிலும் வரதராசனர் ஒரு துறையில் சிறந்து விளங்குகிருர் என்பது எனது ஊகம். பர்னட்ஷா பலப்பல நூல்களை எழுதி முதுமை எய்தியவர். இம் முதுமையில் அவர்க்கு வழங்கும் இக்கால அரக்கப் போர்க்காட்சி வாழ்க்கைக்குக் கிறிஸ்து வேண்டும்; பைபில் வேண்டும் என்ற எண்ணத்தை அவரிடம் அரும்பச் செய்து வருகிறது. வரதராஜனர்க்கோ அக் கருத்து இளமையிலேயே முகிழ்த்தது. வாழ்க்கைக்குச் சமயம் தேவை; கடவுள் தேவை என்று இளமை வரதராஜனர் பேசினர்; எழுதினர். கீழ்நாட்டு இளமை மேல்நாட்டு முதுமையை விஞ்சி நிற்கிறது. ... அவர் திருப்பத்தூரில் வசித்தபோது இயற்கை யோடியைந்த வாழ்வு அவரிடம் தானே தவழ்ந்தது. நண்பரது சென்னை வாழ்க்கை இயற்கையிலே செயற் கையைச் சேர்த்தது. அடிக்கடி நண்பரைச் சென்னை யில் காண்பதில் எனக்கு இன்பம் உண்டாகிறது. அதே நேரத்தில் செயற்கையின் சேர்க்கை நினைவு தோன்றும்போது துன்பம் உண்டாகிறது. அன்பரும் சிற்சிலபோது வருந்துவது எனக்குத் தெரியும்.” -இவ்வாறு பேரறிஞர் திரு.வி.க. அவர்கள் மு.வ.'வை அளவிட்டு எழுதியுள்ளார். உண்மையில் 1936இல் மு.வ." அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் திரு.வி.க.