பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இணைத்துள்ளேன். பல மேலைநாட்டு அறிஞர்தம் நூல் களைப் பயிலும் வாய்பினைப் பெற்ருர். இக்காலத்தில்தான் இவர் நூல்கள் பலவும் எழுதினர். மேலும் இவர் வந்தபிறகு பச்சையப்பரில் தமிழ்ச் சிறப்பு வகுப்புக்கள் எல்லா நிலை யிலும் இடம்பெற வாய்ப்பு உண்டாயிற்று. சென்னைப் பல் கலைக் கழக எல்லையில் முதன் முதல் தமிழ் எம். ஏ.'வைப் பச்சையப்பரில் புகுத்தி, தமிழ்நாட்டிலேயே தமிழ் நலம் பரப்பிய நல்லவர் இவர். அதற்குமுன் பாடத்திட்டமும் தனியாகத் தேர்விற்குச் செல்லும் முறையும் இருந்தன வேனும், கல்லூரியில் முறையாகப் பயிற்றும் நிலை பச்சை யப்பர் வழியே சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு முதன் முதல் அமைந்தது. இவர்தம் செயல் திறனும் உணர்வும் உழைப்பும் பிற உயர் பண்புகளும் இவரை எல்லா வகை யிலும் உயர்த்திப் போற்றின. கட்சி வேறுபாடற்று அரசிய லாளர்களும், இலக்கிய அறிஞர்களும், பிறநாட்டவர்களும் இவரிடம் பெருமதிப்புக் கொள்ளக் காரணமாக இருந்த இவர்தம் பண்பு நலனே இவரைப் பின் இந்த மதுரைப் பல்கலைக் கழகத்துக்குத் துணைவேந்தராக உயர்த்திற்று. இவர்தம் வாழ்க்கைப்படிகள் ஒவ்வொன்றிலும் பெற்ற அனுபவங்கள் பலவற்றையும் இவர்தம் நூல்கள் பல வற்றிலும் பரக்கக் காணலாம். பின் கூடியவரையில் ஒரு சிறவற்றைத் தொட்டுக் காட்டலாம் என எண்ணு கின்றேன். வாழ்க்கையும் இலக்கியமும் இனி இவர் கண்ட வாழ்க்கையினையும் இலக்கியங் களையும் ஓரளவு எண்ணிக் காணல் ஏற்புடைத்தாகும். 'மு. வ. அவர்கள் வாழ்க்கை வேறு, இலக்கியம் வேறு என்று எண்ணியவர் அல்லர். வாழ்க்கையினையே இலக்கிய மாகத் துய்த்தவர். எனவே இவர் வாழ்வைக் கற்பதே இலக்கியமாக அமையலாம். மேலே திரு. வி. க. அவர்கள் காட்டியபடி இயற்கையும் செயற்கையும் இவர் வாழ்வில் கலந்து, இவர் வாழ்வை ஈர்த்துச் சென்றன. அதேைலயே