பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 லுக்கேற்பவே அவற்றை அமைத்துக் கொண்டார். எச். ஜி. வெல்ஸ் என்ற பேராசிரியர் எழுதிய உருத்தெரியாத to6af456öt ( The Invisible Man ) GT6örugog spillą Quģò றிய தம் மண் குடிசையில் மாய மனிதனைப் பற்றிப் பல பக் கங்கள் எழுதியபோதிலும் அவற்றுள்ளும் அவர் வீட்டி லும் நாட்டிலும் நடைபெறும் பல வழக்கங்களையும் கொடு மைகளையும் பிறவற்றையும் சுட்டிக் காட்டுவதையே தம் கருத்தாகக் கொள்கிறர். அந்த மண்குடிசையின் கடைசிப் பகுதியில் கடிதத்தில் கண்டபடி, இவர்தம் வீட்டையும் நண்பர்தம் வீடுகளையும் நாட்டுமக்கள் வீடுகளையும் திருத்த எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் எவ் வளவோ முயன்றும் வெற்றி பெறவில்லை. இதை இவரே என்னிடமட்டுமின்றிப் பல நண்பர்களிடம் சொல்லியிருக் கிருர். இவருக்கு உற்ற சிலரும் இவர் பேச்சாலும் எழுத் தாலும் திருந்தா நிலையில், எங்கோ உள்ளவர்கள் இவர் நூலைப் படித்துத் திருந்தியதாக எழுதிய கடிதங்கள் சில வற்றை என்னிடம் காட்டும்போது இவர் உணர்வு எல்லை யற்றதாகும். இதையும் மண்குடிசையின் கடிதத்தில் தந் துள்ளார் . இவரே அக்கடிதத்தில் சுட்டியபடி இவற்றை யெல்லாம் தம் கடமையாகச் சொல்லியும் எழுதியும் செய்துவந்தார். ஆனாலும் வள்ளுவராலும் இயேசுவாலும் காந்தியாலும் புத்தராலும் பிற பேரறிஞர்களாலும் திருத்த முடியாத இந்தப் பெரிய உலகைத் தம்மால் திருத்த முடி யும் என்ற நம்பிக்கை இல்லையாயினும், தாம் பிறந்ததன் கடமை இத்தகைய கருத்துக்களை மக்கள் உள்ளங்களில் பதியச் செய்யவேண்டும் என்ற உணர்வாலேயே - அதி லும் கதைகள் மூலம் செய்தல் பயன் விளையும் என்று நம் பியே இக்கருத்துக்களை வாரி இறைத்துள்ளார். இப்படியே இவர் சமுதாய வாழ்வு பற்றிக் கூறிய சில கருத்துக்களைக் காண்போம். சமுதாயச் சீர்திருத்தம் டாக்டர் மு. வ. அவர்கள் இலக்கியங்களைப் படைத்த நோக்கமே அவற்றின் வழியே சமுதாயத்தைத் திருத்த