பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 அனைத்துமே ஓரினத்தைச் சார்ந்தவை யெனும் கொள் கையை வற்புறுத்தியதோடு வேற்று நாகரிகங்களும் மொழி களும் கலந்தமையே குமரியொடு வடவிமயத் தொரு மொழி வைத்துலகாண்ட நிலையை மாற்றிற்று என்பதை நன்கு வலியுறுத்துகின்றர். இவர்தம் மொழியியற் கட்டுரை களும் மொழி பற்றிய ஆராய்ச்சிகளும் இக்கூற்றுக்கு அரண் செய்வனவாக உள்ளன. வாயப்புளதேல் நாளை அவை பற்றிக் காணலாம். தமிழ்ப்பாட்டினைப் பற்றி இவர் கூறுவது; "தமிழில் பாட்டு வளமான செல்வம். புசிப்பதற் குச் சேர வாரும் செகத்தீரே என்று கூவி அழைக்க லாம் போல் இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டு களாக வாழும் வளமான பாட்டும் தமிழில் உண்டு. இன்று பிறந்த அழகான பாட்டும் உண்டு. பாட்டு இல்லாமல் இருந்த காலமே தமிழ்நாட்டு வரலாற்றில் காணுேம். இரண்டாயிரம் ஆண்டுகளான பாட்டு என்ருல் என்ன? வெறும் பேச்சா? நூறு தலைமுறை களாக வந்த அறிஞர்கள் அத்தனை பேரும் திரும்பத் திருப்பச் சுவைபார்த்து, நல்ல சரக்கு நல்ல சரக்கு என்று நற்சான்று கொடுத்த பாட்டு அல்லவா!' (மலர். ப. 120) இதில் இவர் பழமையைப் போற்றுவதோடு புதுமைக்கும் பெருமை தரும் சிறப்பு நமக்கு விளங்குகிறதன்ருே? தமிழ்ப் பேராசிரியர் சிலர் போன்று இக்காலப் பாட்டுக்கள் அனைத் தையும் இவர் வெறுக்கவில்லை. நல்ல வளமான பாட்டுக் கள் எக்காலத்தனவாயினும் ஏற்றம் பெறத்தக்கவையே என எண்ணிப் பலவிடங்களில் போற்றிப் பாராட்டியிருக் கிரு.ர். வட நாட்டார் ஒருவர் சொன்னதாகத் தமிழர்தம் மொழிப்பற்றை இவர் சாடும் நிலையினையும் எண்ணிப் பார்க்கவேண்டும். 4