பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 தமிழர் செய்ய வேண்டுவன என்னென்ன என்பதை வரை யறுத்துக் காட்டுகிறர். 'பிற மொழியைப் பழிப்பதில் உள்ள ஊக்கத்தில் கால் பங்காவது தம் மொழியைப் போற்றுவதில் உள்ளதா என்று கவனித்துக் கொள்ள வேண்டும். கடைத் தெரு முதல் பல்கலைக்கழகம் வரையில் தமி ழர்க்குத் தமிழ்மொழியில் பற்று உள்ளது என்பதற்குச் சான்று வேண்டும்...இந்தி புகுவதற்கு முன்னமே பல்கலைக் கழகங்களிலும் அலுவலகங்களிலும் ஆங்கிலம் இருந்த இடத்தில் தமிழ் விளங்குமாறு செய்ய வேண்டும்" (ப. 19-24) என்று ஆக்க நெறிக்கு வழி கோலுகிரு.ர். "பம்பாயிலும் கல்கத்தாவிலும் (திருப்பதியிலும்) தமிழில் படித்துப் பட்டம் பெற வழியில்லை, ஆனல் தமிழ்நாட்டில் எந்த மாகாணத்தவர் வந்தாலும் தமிழில்லாமல் வேறுமொழி படித்துப் பட்டம் பெற வழியிருக்கிறது- தமிழனே வேறுமொழி படித்துப் பட்டம் பெற வாய்ப்பு இருக்கிறது" (ப. 47) என்று தமிழ் நாட்டுக் கல்வித்துறையில் இன்றும் இருக்கும் குற்றத்தினைச் சுட்டிக் காட்டுகிருர். தமிழ் முதல்பகுதி எனப் பெயரளவில் மாறிற்றே ஒழிய, அது பதின்ைகு மொழி களுள் ஒன்ருகத்தானே இன்றும் இருக்கிறது. "தமிழ் நாட்டில் பத்திரிகைத் துறையில் நேற்று வரையில் தமிழ் பிற்போக்காக இருந்ததற்கு, ஆட்சி மொழியாகிய ஆங்கிலத்துக்கு இருந்த செல்வாக்கே காரணம். இவ்வாறு பத்திரிகைத் துறையில் தமிழ் செல்வாக்குடன் விளங்க முடியாமல் இருந்ததனால் நாட்டிற்குத் தீமை விளைந்தது. இன்னும் விளைந்து வருகிறது" (ப. 71) என்று பத்திரிகை உலகில் தமிழ் வாழா நிலையைச் சுட்டிக் காட்டி, எதிர்காலமாவது நன்ருகாதா என ஏங்குகிறர் இவர். இவ்வாறே இன்னும் பல கட்டுரைகளில் தமிழ்