பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 என்றும் விளக்கி, வேறுவகையிலே வளர்ச்சி அடைந்த அரபு எழுத்துக்கள், சீன எழுத்துக்கள் ஆகியவற்றை விளக்கிக் கடைசியாகத் தமிழ் எழுத்துக்களின் தன் மையை விளக்குகிருர். "எழுத்து முறை என்பது மொழிக்கு ஒரு கருவி. அது குறையற்றதாக இருப்பது அருமை. அது கூடிய வரையில் பயன் பட்டால் போதும். தமிழ் எழுத்து முறை அந்த வகையில் போதுமான பயன் தருவதாக இருக்கிறது. கூடியவரையில் நன்ருகவும் அமைந்திருக் கிறது" (ப. 34) என்று முடிக்கிருர். அடுத்து, சொல்லின் கதை'யிலும் சொல்லின் பிறப்பு வழக்கு, இசை, இலக்கணம் முதலியவற்றைச் சுட்டி, 'இடப்பேச்சுகளும் கொச்சை மொழிகளும் என்ற இறுதித் தலைப்பில் சில திருந்தாவகைச் சொற்களைப் பற்றியும் விளக்கம் தருகிறர். இலக்கண மரபில் வழங்கும் பல சொற்களையும் அவற்றின் தேவைகளையும் மரபு நெறியில் வழங்கும் பல சொற்களையும் தேவைகளையும் பிறவற்றை யும் விளக்கி,அவை எவ்வெவ்வாறு மொழிகளோடுசேர்ந்து வழங்கி வருகின்றன என்பதையும் காட்டுகிருர், சொற்கள் தோன்றிய கால எல்லையில் இருந்த முறையினையும் முதலில் சுட்டுகிரு.ர். எனவே இச் சிறு நூல் மொழிக்கு ஆக்கமாகிய சொல்லைப் பற்றி யாவருக்கும் விளங்க உரைக்கிறது. இவ்வாறே மொழியின் கதையும். மொழியல்லாத பழங் கால நிலை தொட்டு, மொழி ஒர் அருங்கலையாய் வளர்ந்த இந்த நாள் வரையில் நடந்த அந்தநெடுவழியினைச் சுட்டி, அந்தப் பெரும் யாத்திரையில் மொழி பெற்ற மாற்றங்கள் பற்றியும் மொழிகளில் எழுந்த எழுதா இலக்கியம் எழுத்து, இலக்கியம் ஆகியவை பற்றியும் பிறவற்றையும் நன்கு காட்டி, மொழியின்றேல் வாழ்வில்லை என்பதை நன்கு விளக்குகிருர், இதற்கென இவர் எடுத்தாளும் உவமை 5