பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 "இலக்கிய ஆராய்ச்சியில் கருத்து வேற்றுமைக்கு இடம்தரும் பண்டாடு வேண்டும். ஒரு புலவரின் சிறப்பு என்று கருதுவதையே, புலவர் குறையென்று மற்றெருவர் கருதுமளவிற்கும் வேறுபாடு காணப் படும். இத்தனைக்கும் ஒரு நாடு இடங்கொடுத்தால் தான் அந்த நாடு இலக்கிய ஆராய்ச்சியில் சிறந்து விளங்கமுடியும். வேறு வழி இல்லை." (இல. ஆ. ப. 10) 'கபிலர், திருவள்ளுவர்.இளங்கோவடிகள், கம்பர், பாரதி, வால்மீகி, காளிதாசர், ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, புஷ்கின், தாகூர்iமுதலானவர்கள் காலம், சூழ் நிலை முதலிய வேறுபாடுகளைக் கடந்தவர்களாகத் தோன்றுகிருர்கள். ஆராய்ச்சியாளர்களும் அவர்களைப் போல் உயர்ந்தவர்களாக, உயர்ந்த உள்ளம் பெற்ற வர்களாக இருந்தால், அவர்களைவிட ஒரளவு ஒற் றுமை காணப்படும். அவர்கள் எழுதும் ஆராய்ச்சி. நூல்களும் பொதுவான அனுபவத்தைக் கூறும் நூல் களாக இருக்கும்.இந்த அளவிற்கு ஒற்றுமை போதும்; இதைக் காணும் திறன்தான் வேண்டும்.' (பக். 11). என்று இவர் எந்த உள்ளத்தோடும் உணர்வோடும் திற ய்ைவாளர் இருக்கவேண்டும் என்பதைத் திட்டமாகச் சுட்டுகிருர். இலக்கிய ஆய்வாளர் என்ற பெயரோடு தங் களுக்கு வேண்டிய இலக்கியங்களைப் புகழ்ந்துகொண்டும்அவற்றில் ஒன்றும் இல்லையெனினும் உயர்ந்ததென்று பாராட்டிக்கொண்டும் இருப்பதும் அதே வேளையில் எவ் வளவு சிறந்தவையாயினும் வேண்டாதவர்தம் இலக்கியங் களை என்றும் குறைகூறிக்கொண்டிருப்பதும் தமிழ்நாட் டில் சிலருடையவழக்கமாக இருந்துவந்ததைக் கண்ட இவர் அந்த மரபு விரும்பத்தக்கதன்று எனவும் ஆராய்ச்சியை அது கெடுக்கும் எனவும் காட்டத் தவறவில்லை. காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடை யார்க் கண்ணதே' என்ற நிலையில் திறனயும் அறிவுடை யார் இருக்க வேண்டுமென்பதே சட்டம். இந்த உண்மை