பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 "மக்கள் உடனே உணர்ச்சி வயப்பட்டுப் புலப் படுத்தும் போற்றுதலையோ தூற்றுதலையோ நாடாமல், காலம் கடந்து விளங்க வல்ல உண்மையை மட்டும் நாடவேண்டும்!" (ப. 332) என்றும் காட்டுகிருர். "இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் தகாதவற்றைக் கற்றுக் காலத்தை வீணுக்காதவாறு கற்கத் தக்கவை இன்னவை என்று எடுத்துரைக்க வல்லவர்கள்' என்ப தையும், 'முறையின்றிக் கற்றுப் பயன்பெருமல் திகைக் காதவாறு இவ்விவ்வாறு கற்று இன்ன இன்ன பயன் பெறுக என எடுத்துரைக்க வல்லவர்கள்" (ப. 336) என்பதையும் காட்டியுள்ளார் டாக்டர் மு. வ. அவர்கள் அந்த நெறிநின்று தம் இலக்கியத் திறய்ைவினைச் செய் தார் என்பதைத் தமிழுலகம் நன்கு அறியும். இனி,இவர் எழுதிய மற்ருெரு நூலாகிய இலக்கியமரபு என்பது, இலக்கியத்தின் தோற்ற மரபு நிலையினையும் பல்வேறு வகைகளையும் விளக்குகின்றது. இவர்தம் முன் னுரையிலேயே இதைத் திட்டமாகக் கூறுகிருர். "வாழ்வு மரபுடையது, இலக்கியம் வாழ்விலி ருந்து மலர்ந்தது. ஆதலின் அதுவும் மரபுடையது. இலக்கியம் நுகர்வோர்க்கு மரபு பற்றிய அறிவு இன்று யமையாதது. இலக்கியம் ஆராய்வோர்க்கும் இந்த அறிவு இன்றியமையாதது. - இலக்கியம் பலவகை. தமிழில் தொன்றுதொட்டு அமைந்த இலக்கிய வகைகளும் உண்டு. இன்றுபுதிய னவாய் அமைந்த இலக்கிய வகைகளும் உண்டு. அவற்றில் அமைந்துள்ள மரபுகளை ஆராய்ந்து கூறு வதே இந் நூலின் நோக்கமாகும்.' என்ற முன்னுரையொடுதான் இந் நூலை இவர் தொடங்கு கின்ருர், இதில் பாகுபாடு பற்றி முதலில் கூறி, பின்