பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*91 நின்று காலந்தொறும் வளர்ந்துவரும் இலக்கியம் மாற்றத் துக் குரியது என்றும் அம் மரபு கெடாத மாற்றத்தை மதித் துப் போற்றவேண்டும் எனவும் குறிப்பர். "இலக்கியம் உயிரினங்களைப் போல் தோற்றமும் வளர்ச்சியும் வாழ்வும் உடையது. ஆகவே இவ்வாறு இருத்தல்தான் என்பது இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பொருந்தாத தடையாகும். தொடக்கத்தி லிருந்து வளர்ந்து மாறிவரும் இலக்கியம் இனியும் அவ்வாறே வளர்ச்சி பெறக்கூடியது என்று மதித்துப் போற்றுவதே கடமையாகும்’ (பக். 201) என்று மரபுவழிக் கெடாத மாற்றங்கள் காலந்தெறும் நடைபெறுவதை இவர் வரவேற்கிருர். எனவே காலந்தொறும் மாறிவரும் நிலையில் இலக் கியம் வளர்ச்சியடைந்து வருவது தேவை என்பதும் அம் மாற்றம் அடிப்படைத்தன்மை கெடாதவகையில் அமைய வேண்டும் என்பதும் தேற்றம். எனவேதான் இந்த நூலி லும் சங்ககாலம் தொட்டுப் பாரதி, பாரதிதாசன் காலம் வரையில் வளர்ந்த இலக்கியங்களை இவர் எடுத்துக்காட்டி விளக்கமும் தந்துள்ளார். இந்த வகையில் மரபு மட்டு மன்றிப்பிற வரலாறுகளையும் உள்ளடக்கியதே இவர் எழுதிய சாகித்திய அகாத வெளியிட்ட தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலாகும், தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு என்னும் இந்நூல் சாகித்திய அகாதமியின் திட்டபடி எழுதப்பெற்றது. மற்றை இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பெறுவது. நாட்டின் ஒற்றுமை உணர்ச்சிக்கு உகந்ததாக இத்தகைய பணியினை மேற்கொண்டதாக பதிப்பாளர் குறிப்புரை அறிவிக் கின்றது.எனவே இந்நூல் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப் பெற்று, தமிழ் இலக்கிய வரலாற்றை