பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

டால்ஸ்டாய் கதைகள்

காலையில் போகலாம். அவ் வேளையில் மனோகரமாகவும் இருக்கும்.‘ என்றான்.

‘என்னால் முடியாது, நண்பரே. இது வியாபார விஷயம். ஒரு மணி நேரத்தை நஷ்டப்படுத்திவிட்டால், அப்புறம் ஒரு வருஷத்திலேகூட ஈடுசெய்ய முடியாது’ என்று சொன்னான் வாஸிலி. அந்தத் தோப்பு விவகாரமும், நகர வியாபாரிகள் தன்னிடமிருந்து அதை அபகரித்து விடுவார்களே என்ற நினைப்பும் தான் அவனுக்கு. ஆகவே அவன் நிகிட்டா பக்கம் திரும்பி ‘நாம் அங்கே போய்ச் சேர்ந்து விடுவோம். போக முடியாதா என்ன?’ என்று கேட்டான்.

கொஞ்ச நேரம் வரை நிகிட்டா பதில் எதுவும் பேசவில்லை. அவன் தனது தாடியையும் மீசையையும் சரிப்படுத்துகிற கருமத்திலேயே கண்ணாகி விட்டது போல் தோன்றியது. பிறகு, சோகம் கப்பிய குரலில் அவன் அறிவித்தான், ‘மறுபடியும் நாம் வழிதவறிச் செல்லாமலிருந்தால்’ என்று.

அவன் சோகம் அடைந்து விட்டதன் காரணம், வோட்கா மீது அவனுக்கு அடக்க முடியாத தாகம் ஏற்பட்டிருந்ததுதான். அந்தத் தவிப்பை ஆற்றக்கூடிய ஒரு பொருள் தேநீர்தான். அது அவனுக்கு இன்னும் அளிக்கப்படவில்லை.

‘நாம் அந்தத் திருப்பத்தை அடையவேண்டியது. அவ்வளவு தானே! அதன் பிறகு நாம் தவறி விடமாட்டோம். அப்புறம் பூரா வழியும் காட்டினூடே செல்கிற ரஸ்தா தானே’ என்று வாஸிலி சொன்னான்.

தனக்கு அளிக்கப்பட்ட தேநீர் கிளாஸை ஏற்றுக் கொண்டவாறே நிகிட்டா சொன்னான்: ‘நீங்கள்