உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

85


“ஒற்றன் இப்படிக் கூறுகின்றான். அவன் உள்ளமும் அந்த வீரப்பெருந்தகையைக் கண்டதும், "எம்மிறை என்று வாய் குளிர எடுத்துச் சொல்லத் தூண்டுகின்ற சிறப்பைக் காண்கிறோம்.

இவனே, - பொறிவரி யன்ன பொங்குளை வயமான் மேலோன், யாரென வினவின், தோலா உரனுடை யுள்ளத் தொன்னா ருட்குஞ் சுரையமை நெடுவேற் சுடர்ப்பூ னோனே! அவனே எம்மிறை! யீதவன் மாவே! கறுவுகொள் நெஞ்சம் கதுவவந் தனனே யாவரும் குறுகல் ஓம்புமின் குறைநாண் மறவீர்! நெருநல் எல்லி நரைவரு கடுந்திறல் பருமத யானை பதைப்ப நூறி - அடுகளத் தொழிந்தோன் தம்பி தொடுகழல் நொச்சித் தெரியல் நெடுந்தகை - ..' . அச்சம் அறியான் ஆரணங் கினனே! (ഗ്ഗഴ്സ് ു) செய்யுள், எதிர் வந்து நிற்கும் படைத்தலைவனை அறிமுகப்படுத்துகின்ற செவ்வியைப் பன்முறை சிந்தித்து மனத்தே கொள்வோமானால், அந்த மாவீரனின் வீரப் பெருமிதத்தை நன்றாக உணரலாம். இத்தகைய மறவர்கள் பலரை உடைத்தாயிருந்த தகடுரின் சிறப்பும் நம்பால் நிலைபெறும்.

அரிசில் கிழார் என்பவர் தகடுர் யாத்திரைப் பாடல்கள் சிலவற்றைச் செய்துள்ளனர் என்று நாம் அறிவோம். அவருடையதாக விளங்கும் புறநானூற்று 300-ஆவது செய்யுளும் இதே சம்பவத்தைக் குறிப்பிடுவதாக அமைந்திருக்கிறது.

தோறா தோறா வென்றி தோலொடு

துறுகன் மறையினும் உய்குவை போலாய்!

நெருதல் எல்லைநீ எறிந்தோன் தம்பி

அகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன்

பேரூ ரட்ட கள்ளிற் - - கோரிற் கோரிற் றேருமா னின்னே. (புறம் 300)

இதன்படி அழிக்கப்பட்டான் தகடுர்த் தலைவனே என்பதும், அவனையழித்த சேரர்படைத் தலைவனை அழிக்கச் சினங்கொண்டு அவன் தம்பி எழுந்தனன் என்பதும் விளங்கும். ஆகவே, நாம் கூறியதுபோல இரு படைத்தலைவரும் களத்துப்படாது, பட்டவன் தகடூர்த் தலைவனே எனவும் கருதலாம். .