66 தஞ்சாவூர் மாவட்டம் 1.தோற்றுவாய் "தண்ணீரும் காவிரியே ; தார்வேந்தன் சோழனே ; மண்ணாவதும் சோழமண்டலமே" - தனிப்பாடல் தமிழ்நாடு பல மாவட்டங்களை உடையது. அவற் றுள் ஒன்றுதான் தஞ்சை. இருப்பினும், பிற மாவட்டங் கள் பலவற்றுக்கு இல்லாத வரலாற்றுப் பெருமை, நீர் வளம், நிலவளம், சமயவாழ்விலும் நாகரிக வாழ்விலும் உயர்நிலை, போக்குவரத்துத் துறையில் பெருவளர்ச்சி ஆகிய சிறப்புக்கள் இம்மாவட்டத்துக்கு உண்டு. புலவர், புரவலர், பேரறிஞர் ஆகியோர் மிகப் பலரைத் தஞ்சை மாவட்டம் ஈன்றெடுத்துத் தமிழ் நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் வழங்கியிருக்கிறது. மக்கள் தொகையில் இம் மாவட்டம் தமிழ் நாட்டில் இரண்டாம் இடம் வகிக்கிறது. சோழர் தொடர்பு தமிழ் நாட்டின் பழமைப் பெருமைக்குக் காரணமான மூவேந்தருள் நடுநாயகமாக வைத்து எண்ணப்படுபவர் கள் சோழ மன்னர்கள் ஆவார். வீரச்செருக்கால் வெளி நாடுகளை வென்றும், வாணிபப் பெருக்கால் உலக நாடு களுடன் உறவுகொண்டும், கலைச்செல்வத்தால் நாட்டு மக்களுக்கு இன்ப வாழ்க்கையை வழங்கியும், வாயில்லாப் பசுவுங்குக்கூட நீதிவழங்கும் அளவுக்கு நேர்மையான ஆட்சியை நிலைநாட்டியும் சோழப் பேரரசர்கள் சிறப்புற் றார்கள். இவர்களுடைய தலைநகரங்களாக இருந்த திரு வாரூர், காவிரிப்பூம்பட்டினம், தேரழுந்தூர், பழையாறை, சோழமாளிகை, மலைக்கூற்றம் (இன்றைய கும்பகோணம்)
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/10
Appearance