உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 வட்டத்தில் பெரிய அளவில் பயிரிடப்படுகிறது. வேதா ரணியம் உப்பும் தஞ்சாவூர் கொடை மிளகாயும் தமிழ் நாடெங்கும் புகழ் பெற்றவை. உண்ணக்கஞ்சியோடு உறைக்கும் மிளகாயும் கைக்கு உப்பும் இனிக்கும் கரும்பும் வழங்குவது இம்மாவட்டம் ஒன்றே. மேலும், இம்மாவட் டத்தில் காய்கறியும் மீனும் எளிதில் கிடைக்கின்றன. வாழைத்தோட்டம், வெற்றிலைக்கொடி, தென்னந்தோப்பு ஆகியவற்றைத் திரும்பும் திசையெல்லாம் காணலாம். பசுமையும் செழுமையும் நிறைந்த இம்மாவட்டம் தமிழ் நாடு அரசாங்கத்துக்கு நிலவரியாக ஆண்டுதோறும் ஒரு கோடி 35 லட்சம் ரூபாய் வழங்குகிறது. வேளாண்மை வருவாய்வரி அலுவலர்கள் கூடுதலாக இருப்பதும் இம் மாவட்டத்திலேயே ஆகும். நில விற்பனையை யொட்டி ஆவணக் களரிகளும் நிலங்கள் பற்றிய வழக்குகளும் இங்கு மிகுதியாக உள்ளன. சமய வாழ்வு சமய வாழ்விலும் தஞ்சை மாவட்டம் சீரும் சிறப்பும் பெற்றிருக்கிறது. தமிழ் நாட்டிலுள்ள கோயில்களின் மொத்த எண்ணிக்கையில் சரிபாதி தஞ்சை மாவட்டத் திலும் மற்றொருபாதி ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் இருக்கின்றன. 19-ஆம் நூற்றாண்டில் லோயர் அணைக் கட்டு என்னுமிடத்தில் கல்லணை கட்டுவதற்குக் கல் கொணராது கங்கை கொண்டச் சோழபுரத்துக் கோயில் மதிற்சுவர்களைப் பிரித்துப் பிரிட்டிஷார் அணையும் பால மும் அமைத்தனர் என்பதும் மலைவளம் மருந்துக்கும் இல்லாத மாவட்டத்தில் நூற்றுக்கணக்கில் கற்கோயில் கள் கட்டப்பட்டிருப்பதும் ஒப்புநோக்கத் தக்கன. சைவ சமயவர் நால்வர் பாடியுள்ள தலங்கள் 274-ல் தஞ்சை மாவட்டத்திலும் (அதனுள் அமைந்த காரைக்கால் பகுதியிலுமாக) 165 தலங்கள் உள்ளன. நால்வருக்குப் பிற்காலத்தில் சோழ அரசர்களும் அரசிகளும் திருப்பணி