உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பொம்மை வரை கலைப்பொருள்கள் உலோகத்திலும் நெட்டியிலும் மண்ணிலும் கவினுறச் செய்யப்படுவது தமிழ் நாட்டில் இம்மாவட்டம் ஒன்றில் மட்டுமேயாகும். கலைகளும் கதம்பமும் வளரும் மாவட்டமாக இது காட்சி தருகிறது. கரிகால் வளவன் காலந் தொடங்கிக் கலைவேந்தன் சரபோஜி காலம்வரை கலைஞர் களை ஆதரிக்கப் புரவலர்கள் இருந்து வந்திருக்கின்றனர். பிற சிறப்புக்கள் ஆங்கில ஆட்சியிலும் உரிமை பெற்ற இந்தியா விலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் அரசர் பல ரின் திவான்கள், புகழ்பெற்ற ஆட்சியாளர், அறிவுலகம் போற்றி மகிழும் பெருமக்கள், பல இதழ்களின் ஆசிரியர் கள், எண்ணிலும் எழுத்திலும் வல்லவர்கள் ஆகியோரில் பலர் இம்மாட்டத்தினராகவே உள்ளனர். நுண்ணிய அறி வுடையவர்களாக இம்மாவட்டத்து மக்கள் இருப்பதால் சொத்துரிமை பற்றிய வழக்குகளின் எண்ணிக்கை கங்கு கரையின்றி இருப்பதும் குறிப்பிடத் தக்கது. மக்கள்தொகைக் கணக்குப்படி 1961-இல் இம்மா வட்டத்தவர் 32,49,960 பேர் ஆவார்கள். தமிழ் நாட்டி லேயே மிகக்கூடுதலாக மக்கள் வாழும் பெரிய மாவட் டங்களுள் ஒன்றாக இருக்கும் நிலை நெடுங்காலமாகத் தஞ்சைக்கு உண்டு. பெல்ஜியம், ஹாலாந்து, டென் மார்க்கு ஆகிய நாடுகள் ஒவ்வொன்றின் மக்கள் தொகை யையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது, தஞ்சைமாவட் டத்தின் மக்கள்தொகை அவற்றினும் கூடுதலாக இருக்கிறது. அளவு முறைகளிலும் இம்மாவட்டத்தின் தனித் தன்மை தெரிகிறது. நிலம் வேலிக்கணக்கில் அளக்கப் படுகிறது. தஞ்சாவூர்க் கலம், தஞ்சாவூர்ப்படி என்பன வும் உண்டு. மலை என்பது இம்மாவட்டத்தில்