உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 கோடியக் காடு தவிர இம்மாவட்டத்திலுள்ள பிற காடுகளாவன:- (1) சீர்காழி வட்டத்திலுள்ள வோட்டான் குடிக் காடு. (2) திருத்தருப் பூண்டி ஞாயிறுக்காடு. வட்டத்திலுள்ள தலை (3) பட்டுக்கோட்டை வட்டத்தில் கந்தர்வகோட்டை யருகே உள்ள ரிசர்வு காடு. (4) முத்துப்பேட்டை ரிசர்வு காடு. இம்மாவட்டத்திலுள்ள காடுகளின் மொத்தப்பரப்பு' 10,000 ஏக்கர் ஆகும். இம்மாவட்டத்தில் பயிராகும் மரங்களில் குறிப்பிடத் தக்கவை கடற்கரை ஓரங்களில் சவுக்கு மரங்களும் கந்தர்வ கோட்டைப் பகுதியில் முந்திரிச் செடியும், முத்துப்பேட்டையில் மாமரம் Alathaye மரம், தில்லை. மரம் ஆகியவையும் ஆகும். படுகை நிலங்களிலும் சவுக்கு பயிரிடவும் முத்துப் பேட்டைக் காடுகளில் புதிய மரங்கள் பலவற்றை உண்டாக்கவும் காடு பேணுந்துறையினர் ஆவன செய்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்பட்டிருப்பதால் சீர்காழி வட்டத்திலும் புதி தாகக் காடு வளர்க்கும் முயற்சிகளும், ஆற்றங்கரைகளில் மரம் நடும் வேலையும் மாவட்டமெங்கும் மேற்கொள்ளப். பட்டிருக்கின்றன. சீர்காழி வட்டத்துத் திருமுல்லைவாயில் காட்டில் பிரம்புக்கொடிகள் நிறைய உண்டு. இவற்றால் ஆளைக் காரன்சத்திரத்தில் பிரம்பு வேலைகள் நடைபெறுகின்றன. கந்தர்வகோட்டைக் காடுகளில் முந்திரிப் பயிர் செழித்து