இன்றும் வழங்குவதாக 22 66 இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா" என்னும் நூல் தெரிவிக்கிறது. கரிகால் சோழன் என்ற பெயருடைய அரசர் பலர் இருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இடைக்காலச் சோழர் ஐந்தாம் நூற்றாண்டளவில் சோழர் செல்வாக்குக் குறைந்தது. பல்லவர் கை ஓங்கியபோது அவர்களுக்கு அடங்கியிருப்பதும், பல்லவர் செல்வாக்குச் சற்றுக் சேர்ந்து பல்லவரை எதிர்க்கத் துணிவதும் சோழ வம்சத்து வழக்கமாக இருந்தது. குறைந்தபோது பாண்டியருடன் செந்தலை, நியமம் என்ற ஊர்களில் முத்தரையர்கள் பற்றிய கல்வெட்டுக்கள் உள்ளன. முத்தரையர்கள் சந்திரலேகை எனப்படும் செந்தலையைத் தலைநகராகக் கொண்டு-பல்லவர்க்குத் திறை செலுத்திச் சிற்றரசர் களாக -தஞ்சாவூர் வரையுள்ள பகுதிகளை ஆண்டு வந்தனர். முத்தரையர் கொடும்பாளூர் வேளிருடன் சில காலம் உறவாகவும் சில காலம் பகையாகவும் இருந் தனர். பல்லவ அரசனான இரண்டாம் நந்திவர்ம பல்லவன் (731-795) என்ற மன்னனின் படைத்தலைவனாக இருந்த பெரும்பிடுகு முத்தரையன் என்ற சுவரன்மாறன் வல்லத் தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். அவனுக்கு, தஞ்சைக்கோன்", "வல்லக்கோன்" என்ற பட்டங்களும் இருந்தன. பிற்காலச் சோழர் 850-ஆம் ஆண்டளவில், விஜயாலயச் சோழன் முத்தரையரைத் தாக்கித் தஞ்சையைக் காப்பாற்றியதன்
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/23
Appearance