24 யாண்டார் நம்பியைக்கொண்டு முறைப்படுத்தியவனும் சமணம், பௌத்தம், இவனேயாவான். வைணவம் போன்ற பிற சமயத்துக் கோயில்களுக்கும் இராஜராஜன் ஒல்லும் வகையாலெல்லாம் ஆதரவு நல்கினான். இராஜராஜன் சோழர் ஆட்சிக்குப் புத்துயிரூட்டத் தன் ஆட்சிக்கால முழுவதும் போரிட்டான். தெற்கே பாண்டிய - சேர - ஈழ மன்னர் மூவரும் ஒன்று சேர்ந்து இவனைத் தாக்கினர். இருபெரும் போர்களில் இவன் பாண்டியரை வென்றான். காந்தளூர், விழிஞம் போர் களால் சேரநாட்டை இராஜராஜன் தன் வயப்படுத்தி னான். கடற்படையை அனுப்பி ஈழத்தின் வடபகுதியை வென்று, பொலன்னறுவையையும் தன் தலைநகராக்கிக் கொண்டான். பின்னர், கன்னட நாட்டையும் கைப் பற்றினான். இலங்கையருகேயுள்ள மாலைத்தீவு (Malding) அந்தமான் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றையும் இராஜராஜன் வென்றான். இவற் றுக்கெல்லாம் இவன் மகனும் படைத்தலைவனுமான இராஜேந்திரன் உற்ற துணையாக இருந்தான். முந்நீர்ப் பன்னீராயிரத்திலும் இராஜராஜன் ஆணை பழந்தீவு குசன்றது. இராஜராஜன் தான் அடைந்த வெற்றிகளால் வரலாறு கண்டிராத ஒரு தமிழ்ப்பேரரசை நிறுவினான். அவன் காலத்து அரசியல் அமைப்பும் உள்நாட்டுப் பிரிவு களும் குடவோலை முறைகளும் சீரியமுறையில் அமைக்கப் பட்டிருந்தன. உலகப் பெருமன்னர்களுள் இராஜராஜ னும் ஒருவன். இது "உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை" முதலாம் இராஜேந்திரச் சோழன் 1014 முதல் 1044வரை ஆட்சி புரிந்தான். கங்கைவரை படையெடுத் துச் சென்று, கங்கை நீரைக் கொணர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய நகரத்தை அமைத்து அதைத் தன் தலைநகராக்கிக்கொண்டான். இச்செயலால் தஞ்சை
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/25
Appearance