உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கடலோடு கலக்கும் சங்கமுகத்தில் விளங்கிய காவிரிப்பூம்பட்டினம். அவர்களுடைய முதல் பெரிய அரசன் விஜயாலயன். வடக்கே பரவிய சோழர்களைத் திடீரென்று ராஷ்டிரகூடர்கள் தோற்கடித்து நிறுத்தினர். ஆனால் இராஜராஜ சோழன் மீண்டும் சோழர்களுடைய ஆதிக் கத்தை நிலைநாட்டினான். இது பத்தாம் நூற் து றாண்டின் இறுதியில் நிகழ்ந்தது. நிகழ்ந்தது அவன் இலங்கையை வென்றான். சோழர்கள் அங்கே 70 ஆண்டுகள் அரசாட்சி செய்தனர். அவ னுடைய மகன் இராஜேந்திர சோழனும் போர் வலிமையும் வீரமும் உடையவனாக இருந்தான். அவன் தன்னுடைய போர்யானைகளைக் கப்ப லில் ஏற்றிச்சென்று பர்மாவை வென்றான். வட இந்தியாவுக்கும் வந்து வங்காள மன்னனைப் புறங்கண்டான். இவ்வாறு சோழப் பேரரசு பெரிதும் பரவிக்கிடந்தது. குப்தர் காலத்துக் குப் பின்னர் இதைத்தான்மிகப்பெரிய பேரரசு என்று சொல்லவேண்டும். இராஜேந்திரன் கி. பி. 1013-லிருந்து 1044 வரை ஆண்டான். அவனுக்குப் பின்னர், கப்பம் கட்டிவந்த சிற்றரசர்கள் கலகம் செய்ததனால், சோழப் பேரரசு சிதறுண்டது. சோழர்கள் போரில் வெற்றி அடைந்ததன்றி அவர்கள் நெடுங்காலமாகக் கடலில் வாணிபத் திலும் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் நெய்த மெல்லிய துணிகள் பிற நாட்டினரால் பெரிதும் விரும்பப்பட்டன. காவிரிப் பூம்பட்டினத்தில் கப்பல்கள் பண்டங்களை ஏற்றிக்கொண்டு ஓயாமல் போய்வந்து கொண்டிருந்தன. 99