உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 பட்டது. இவ்விதமே ஒவ்வொரு செயலையும் செய்ய ஏரிவாரியம், பொன்வாரியம் போன்ற பல குழுக்களும் இருந்தன. சோழருக்குப் பின் . சிலகாலம் 1279-இல் சோழப் பேரரசு மறைந்தது. பாண்டியர் சோழநாட்டை ஆண்டனர். 14-ஆம் நூற் றாண்டில் விசயநகரப் பேரரசர்கள் சோழ மண்டலத் தைத்தங்கள் ஆட்சிக்குட்படுத்திக் கொண்டனர். அவர் களுடைய பிரதிநிதிகளாக 1532 முதல் 1675 வரை நாயக்கர்கள் தஞ்சை மாவட்டத்தை ஆண்டு வந்தனர். நாயக்கர் ஆட்சி தஞ்சை நாயக்க பரம்பரையைத் தோற்றுவித்தவன் சேவப்பநாயக்கன் என்பவன். இவன் காலத்திலேயே ஐரோப்பிய நாட்டினர் பலர் நாகப்பட்டினத்திலும் தரங்கம்பாடியிலும் தங்குவதற்கும் குடியேறுவதற்கும் அநுமதிக்கப்பட்டனர். கிறித்தவமும் இஸ்லாமும் இவன் ஆட்சியில் பரவின. சேவப்பநாயக்கனுக்குப்பின் அவன் மகன் அச்சுதப்பனும் (1560-1600), ரகுநாத நாயக் கனும் (1600-1634) ஆட்சி செலுத்தினர். இம்மூவரிடமும் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் மிகப்புகழ் பெற்றவராவார். யாழ்ப்பாணத்து மன்னர் போர்த்துகல் நாட்டினரால் விரட்டப்பட்டபோது அம்மன்னனுக்கு அச்சுதப்பன் தஞ்சம் கொடுத்தான். தந்தை காப்பாற்றிய யாழ்ப்பாண மன்னனுக்குத் தனயன் ரகுநாதன் யாழ்ப் பாண நாட்டை மீட்டுக்கொடுத்தான். ரகுநாத நாயக்கன் செஞ்சிமன்னர்களையும் போரில் தோற்கடித்தான். கலை ஞர்களையும் புலவர்களையும் ஊக்குவித்தான். அறிவுத் துறைகள் அனைத்துக்கும் ஆதரவு காட்டினான்.