44 யம்மன் முஸ்லிம் படையெடுப்புக்களின்போது தஞ் சைக்கு வந்து தஞ்சமடைந்த ஆச்சாரிய சுவாமிகளுடன் வந்த அர்ச்சகர்களால் கொண்டுவரப்பட்டது; தஞ்சை அரசர்கள் அந்த அம்மனுக்கு ஒரு கோயில் எடுத்தனர். செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம்' என்ற உறுதிப்பாடுடைய செட்டி நாட்டுச் செல்வர்கள் 1860 முதல் 1960 வரை இம்மாவட்டத்தில் மூன்று கோடி ரூபாய் செலவு செய்து (இன்றைய மதிப்பு 12 கோடி) நூற்றுக்கு மேற்பட்ட சிவன் கோயில்களுக்குத் திருப் பணி செய்திருக்கின்றனர். சமய தேவாரம் பாடி நாளும் இன்னிசையால் நற்றமிழ் வளர்த்த ஞானசம்பந்தரும் ஏனைய சைவ நாயன்மார் பலரும் இம்மாவட்டத்தினரே ஆவர். இவ்வாறே சைவ தத்துவங்களைத் தலைமுறை தலைமுறையாகப் பரப்பிவரும் திருவாவடுதுறை, தருமபுரம்,திருப்பனந்தாள் ஆதீனங்கள் அமைந்திருப்பதும், காஞ்சியில் தோன்றிய காமகோடிபீடம் சங்கராச்சாரிய சங்கராச்சாரிய சுவாமிகளின் மடம் நிலைத்திருப்பதும் இந்த மாவட்டத்திலேயே ஆகும். சோழ அரசர்கள் திருமுறைகளை வகுத்தும் சைவசமயத் தைத் தாம் வென்ற நாடுகளில் பரப்பியும் சிவத்தொண்டு செய்திருக்கின்றனர். அவர்களும் தஞ்சையை ஆண்ட ஏனைய அரசர்களும் வேதத்தில் வல்லவரான பிராமணர் களை நாடெங்குமிருந்து தஞ்சை மாவட்டத்தின் வளமான பகுதிகளுக்கு வரவழைத்தனர்; அவர்களுக்கு நில மானி யம் கொடுத்தனர்; பல நகரங்களில் குடியிருப்பதற்கெ னத்தெருக்கள் தானமாக அவர்களுக்கு வழங்கப்பட்டு அவற்றில் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப் பெற் றன. மாயூரம்,திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய நகரங்களிலுள்ள மகாதானத்தெருக்களும்கும்பகோணத் திலுள்ள யாகசாலைத் தெருவும் இவ்வாறு ஏற்பட்ட வையே. கோவிந்தபுரம், கோவிந்தக்குடி, அய்யம்
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/45
Appearance