47 சீர்காழி வட்டத்திலுள்ள திருநாங்கூர் என்ற ஊர் 11 திருப்பதிகள் உள்ள சிறப்புடையது. 11 கருட சேவைகளையும் ஒருங்கே சேவிப்பது ஒரு பேறாகக் கருதப் படுகிறது. வைணவப் பெருமக்களில் திருமங்கை ஆழ்வார் சீர் காழி வட்டத்துத் திருக்குறையலூரினர். திருமழிசை ஆழ் வார் சமாதி அடைந்த இடத்தில் கும்பகோணம் மூர்த்தி செட்டித் தெருவில் ஒரு கோயில் கட்டப்பெற்றிருக்கிறது. வியாக்கியானச் சக்கரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை திருவிடைமருதூர் அருகேயுள்ள சேய்ஞ்ஞலூர் என்னும் சிற்றூரிலேயே தோன்றியவர் என்பர். தஞ்சை மாவட்டத்திலுள்ள வைணவக் கோயில்கள் பெரும்பாலும் வடகலைக் கோயில்கள் என்பதும் பிற மாவட்டங்களில் இருட்பவை தென்கலைக் கோயில்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமயத்தை வளர்த்த அரசர்களை எண்ணும்போது சைவர்களுக்குக் கோயிலாக உள்ள தில்லையில் பொன் வேய்ந்தவன் தஞ்சையை ஆண்ட சோழ அரசன் என்றால் வைணவப் பதிகளான திருப்பதியிலும் ஸ்ரீசைலத்திலும் கோயில்களின் விமானங்களுக்குப் பொன்முகடு அமைத்த சேவப்ப நாயக்கரும் திருவரங்கத்துக்குத் தங்க முடியும் தங்க சிம்மாசனமும் அளித்த அச்சுதப்ப நாயக்கரும் தஞ் சையை ஆண்ட அரசர்களே என்ற நினைவு ஏற்படுகிறது. பௌத்தம்: பெளத்த மதம் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் அருகிவிட்டபோதிலும் ஓராயிரம் ஆண்டு களுக்குமுன் அது ஓரளவு இடம் பெற்றிருந்ததற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடி பெளத்த சமயத் தொடர்பு நிறைந்த ஊர் நாகப்பட்டினம்
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/48
Appearance